ஈஸ்டர் ஞாயிறு தின துன்பங்களின் பின்னர் பொதுநலவாய உறுப்புரிமை நாடுகள் வழங்கிய ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் இலங்கை பாராட்டுகின்றது

ஈஸ்டர் ஞாயிறு தின துன்பங்களின் பின்னர் பொதுநலவாய உறுப்புரிமை நாடுகள் வழங்கிய ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் இலங்கை பாராட்டுகின்றது

Photo 1

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தின துன்பங்களின் பின்னர் பொதுநலவாய உறுப்புரிமை நாடுகள் மற்றும் பொதுச்செயலாளர் வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு இலங்கையின் பாராட்டுகளை புதன்கிழமை (ஜூலை 10) தெரிவித்ததுடன், பொதுநலவாயமானது தம்மிடையே வன்முறை தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இணையத்திலான பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதன் மற்றும் அவற்றைச் சமாளிக்க நாடுகளையும் இணைய சேவை வழங்குநர்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் மீள உறுதிப்படுத்தும் ‘க்ரைஸ்ட்சேர்ச் அழைப்பு முன்முயற்சியை’ வரவேற்ற அதே வேளை, அமைதியான மற்றும் பாதுகாப்பான இணையத்திற்கான உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் பொதுநலவாய சைபர் பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கான தனது பாராட்டுக்களையும் வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.

லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் உறுப்பு நாடுகள் 70வது ஆண்டு பொதுநலவாய விழாவை அனுஷ்டிக்கும் முகமாக, கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற 19வது பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்திற்கு (சி.எஃப்.ஏ.எம்.எம்) வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வேளையில் வெளிவிவகார செயலாளர் இந்த அவதானிப்புகளை மேற்கொண்டார். இங்கிலாந்து வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜெரமி ஹன்ட் மற்றும் பொதுநலவாய மற்றும் ஐ.நா. வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் விம்பிள்டன் பிரபு தாரிக் அகமட் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். ஆரம்ப கருத்துக்களை பொதுநலவாய செயலாளர் நாயகமான ஸ்கொட்லாந்து கியூ.சி. பெட்ரிசியா வழங்கினார்.

நிலையான அபிவிருத்தி தொடர்பான பொதுநலவாய நிகழ்ச்சி நிரல் மற்றும் தூய்மையான கடல் நிர்வாகம் மற்றும் நிலையான கடல் தொழில்கள் குறித்த பொதுநலவாய நீல சாசனத்தை ஏற்றுக்கொள்வதனை வரவேற்ற அதே வேளை, பொதுநலவாய நீல சாசனத்தின் கீழ் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் வாழ்வாதார நடவடிக்கைக் குழுவின் 'வீரன்' என்ற வகையில் இலங்கை இந்த ஆண்டின் பிற்பகுதியில் முதலாவது சதுப்புநில செயற்குழு கூட்டத்தை நடாத்த எதிர்பார்த்துள்ளது என தெரிவித்தார். 2016ஆம் ஆண்டிற்கான நீல-பசுமை அபிவிருத்தி மூலோபாயம் மூலமாக இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், ராணியின் பொதுநலவாய விதான முன்முயற்சியின் (கியூ.சி.சி) நினைவாக திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வனப்பகுதியை இலங்கை அர்ப்பணித்து வருவதாகவும், இந்த திட்டமானது அந்த பகுதியை ஒரு இயற்கை வனப்பகுதியாக மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க அவர்கள் தனது கருத்துக்களில் பொதுநலவாய மற்றும் அதன் கொள்கைகளுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியதுடன், பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற ரீதியில் 70ஆவது ஆண்டு உறுதிமொழியை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்வதை வரவேற்றார். 2018ஆம் ஆண்டின் பொதுநலவாய அரச தலைவர்கள் கூட்டத்தின் கட்டளைகளை அமுல்படுத்துவதையும், குறிப்பாக நிலையான அபிவிருத்தி, உள்-பொதுநலவாய இணைப்பு மற்றும் வர்த்தகத்திற்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதை ஆதரிப்பதனையும் இலங்கை மேலும் வரவேற்றது. பொதுநலவாய நீதி அமைச்சர்கள் கூட்டத்தை 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கொழும்பில் நடாத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டிய வெளிவிவகார செயலாளர், கிரீஸ் பொதுநலவாய அமைதி முன்முயற்சியின் ஆதரவை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். பொதுநலவாய நோக்கங்களை மேலும் மேம்படுத்துவதில் செயலாளர் நாயகத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்புக்களுக்காக வெளிவிவகார செயலாளர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

மாலத்தீவை பொதுநலவாய நாடுகளுக்கு மீள இணைப்பதற்கான தனது ஆதரவை இலங்கை வழங்கியதுடன், மீள இணைப்பதற்கான 'விரைவான பாதையை' பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் இங்கிலாந்து வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்ட பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பாகமாக 2019 ஜூலை 10-11 திகதிகளில் லண்டனில் இடம்பெற்ற ஊடக சுதந்திரம் குறித்த உலகளாவிய மாநாட்டிலும் வெளிவிவகார செயலாளர் பங்கேற்றார்.

வெளிவிவகார செயலாளருடன் சென்றிருந்த இலங்கைத் தூதுக்குழுவில், ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் மனிஷா குணசேகர, லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் (பொதுநலவாயம் மற்றும் அரசியல்) அப்துல் ஹலீம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பிரிவின் உதவிப் பணிப்பாளர் தக்ஷிலா அர்னோல்டா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

லண்டன்

13 ஜூலை 2019

Photo 2

 

Photo 3

Please follow and like us:

Close