ஆபத்திற்குள்ளாகும் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனவகைகளின் சர்வதேச வர்ததகம் பற்றிய சாசனத்தின் (CITES) தரப்பினர்

ஆபத்திற்குள்ளாகும் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனவகைகளின் சர்வதேச வர்ததகம் பற்றிய சாசனத்தின் (CITES) தரப்பினர்

-CITES-LOGO (1)

பொதுவாக CITES  என்று அழைக்கப்படும் ஆபத்திற்குள்ளான காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனவகைகளின் சர்வதேச வர்ததகம் பற்றிய சாசனமானது அரசாங்கங்களுக்கு இடையிலான சர்வதேச உடன்படிக்கையொன்றாகும் என்பதுடன் அதன் பிரதான நோக்கமானது யாதெனில் காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனவகைகளின் சர்வதேச வர்த்தகமானது அத்தகைய இனவகைகளின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதை உறுதிசெய்வதாகும். CITES  சாசனத்தின் கைச்சாத்திட்டுள்ளவர்கள் மாநாட்டின் தரப்பினரென கூட்டாக குறிப்பிடப்படுவதுடன் சாசனத்தின் அமுலாக்கத்தினை மீளாய்வு செய்வதற்காக  இரண்டு-மூன்று வருடங்களில் சந்திப்பர மாநாட்டின் தரப்பினரின் கூட்டங்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்பதுடன் கூட்டமானது  வழமையில் ஒரு தரப்பால் நடாத்தப்படும்.

அமர்வொன்று அதன் பிரதேசத்திற்குள் இடம்பெறவேண்டும் என்று அழைப்பை விடுக்கும்  அரசாங்கமானது அதற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கும் வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் இயல்பு மற்றும் சாத்தியமான அளவு, நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படும் உண்மையான மேலதிக செலவினம் தொடர்பில்  செயலாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்து   ஐக்கிய நாட்டு அமைப்புகளின் அமர்வுகள் தாபிக்கப்பட்டுள்ள தலைமையகத்திற்கு வெளியில் நடத்தப்படலாம்  என்று  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது அதன் 1976 டிசம்பர் 17 ஆம் திகதிய 31/140 ஆம் இலக்க தீர்மானத்தின் பிரிவு 1 இன் பந்தியினால் தீர்மானித்தது.

அதற்கிணங்க, 2016 செப்டெம்பர் 24 முதல் ஒக்டோபர் 3 வரையில் ஜொஹானர்ஸ்பேக், தென் ஆபிர்காவில் இடம்பெற்ற  ஆபத்திற்குள்ளான காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனவகைகளின் சர்வதேச வர்ததகம் பற்றிய சாசனத்தினது தரப்பினர்களின் 17வது கூட்டத்தில்,   CITES தரப்பினரின் 18வது கூட்டத்தை நடாத்தவும், CITES நிலையயியற் குழு (SC71 மற்றும் SC72) ஆகியவற்றின் 71 ஆம் மற்றும் 72ஆம் கூட்டங்களை நடாத்துவதற்கான  இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டது.

ஆபத்திற்குள்ளான காட்டு விலங்குகள் மற்றும் தாவர இனவகைகளின் சர்வதேச வர்ததகம் பற்றிய சாசனத்தினது (CITES) தரப்பினரின் 18ஆவது கூட்டமானது 2019 மே 23 முதல் யூன் 3வரையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பில் நடாத்தப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. இலங்கையில் அனுசரணை வழங்கப்பட்வுள்ள பாரிய ஐ.நா மாநாட்டில் 183 பல்வேறு நாடுகளைச் சார்ந்த 3,000 திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநதிகளும் ஊடகவியலாளர்களும்  பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை ஏன்?

  • கன்வர்சேசன் இன்டர்நசனல் இன்பிரகாரம், இலங்கையானது உலகிலுள்ள 34 ‘பல்வகைத்தன்மையான இடங்களில்’ ஒன்றாகும் என்பதுடன் சுற்றளாத்துறை மற்றும் ஏனைய சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான ஆண்டுமுழுவதும் காணக்கூடிய பாரிய எண்ணிக்கையிலான உயிரிணங்கள் மற்றும் உயர் பல்வகைத்தன்மையை கொண்டுள்ளது.
  • இலங்கையானது சிறிய அளவிலான நாடாக இருபிபினும், உயர் அளவிலான உயிர் வாழ்வனவற்றை கொண்டுள்ள உலகிலுள்ள நாடாகும்.
  • இலங்கையில் காணப்படும் 106 வகையிலான விலங்குகளில்: வனசீவராசிகள் ஆர்வலர்கள் அதிகமாக கவனம் வெசலுத்துவது இலங்கை யானைகள், சோம்பல் கரடி, சிறுத்தை புலிகள், சம்பார் மான் ஆகியவற்றில் ஆகும்.
  • அதேவேளையில், இலங்கையை சுற்றியுள்ள கடலானது நீல திமிங்கிலம், ஸ்பேர்ம் திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின் உள்ளடங்களான பாரிய மீன் குடும்பங்களை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
  • நாட்டில் அரிதான பாரிய யானைகள் மற்றும் நீர்வாழ்வன காணப்பட்டாலும், இலங்கையின் சீவராசிகளில் பறவைகள் சிறந்த இடத்தை வகிக்கின்றன. கிட்டத்தட்ட 510 வகையான பறவைகளில் 33 வகையானவை ஆண்டு முழுவதும் காணக்கூடியவையாகும்.
  • அதிகளவில் போற்றப்படாவிட்டாலும், 119 வகையான நீர்வாழ் உயிரினங்களில் 106 வகையானவை ஆண்டு முழுவதும் காணக்கூடியதாகும். இந்த நாடானது உலகிலுள்ள அதிகளவு  நீர்வாழ் உயிரணங்களை  கொண்டுள்ள நாடாக நீண்ட காலமாகமே உரிமை கொண்டாடுகின்றது.

CITES மற்றும் இலங்கை

இலங்கையானது CITES சாசனத்தை 1979 மே 4ஆம் திகதி ஏற்றுக்கொண்டது. அதனைத்தொடர்ந்து, இலங்கையானது  CITES ஒரு தரப்பாக நான்கு தசாப்த காலமாக இருப்பதுடன்; CITES தை நாட்டில் நடைமுறைபடுத்துவது தொடர்பில்  தேசிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. தற்சமயம், CITES ஐ  நாட்டில் நடைமுறைபடுத்துவது தொடர்பில் தேவைபாடுகளை கொண்டிராத தரப்பிற்காக 3ஆவது வகையில் இலங்கையானது சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை வனசீவராசிகள் ஆர்வலர்கள்  அவசியமான ஒழுங்குவிதிகளை, தேசிய மட்டத்தில் CITES   ஐ நடைமுறைபடுத்தும் ஒழுங்குவிதிகளை உள்ளடக்கி அறிமுகப்படுத்துமாறு  இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியும் பரிந்துரைத்தும் வருகின்றனர். இலங்கையில் CITES   ஐ நடைமுறைபடுத்துவதில் உள்ள10ர் ஒழுங்குவிதிகளை தயார்படுத்தல் செயற்பாடானது  நாட்டின் சீவராசி;கள் வெளியே கடத்திச்செல்லப்படுவதை தடுக்கும் என்பதுடன் இலங்கை துறைமுகங்கள், விமான நிலையம் மற்றும் இலங்கை கடற்மார்க்கம் ஆகியவற்றின் ஊடாக    வனசீவராசிகள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவும் வழிசமைக்கும்.

CITES  ஒழுங்குவிதிகளை தேசிய சட்டங்கள் எப்போதும் மேலோங்கி நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இலங்கையில் வனசீவராசிகளை கடத்திச்செல்லும் வழிகளை அடைப்பதற்கு CITES வழிசமைக்கும்   அதேளையில் உள்ள10ரில் காணப்படும் சட்டங்கைளையும் பலவீனப்படுத்தாது.  மேலும், நாடுகளில் இருந்து சீவராசிகள் (ஆபிரிக்காவில் இருந்து தந்தம் போன்றன) மல்லிகை, மரங்கள் மற்றும் கடற்சார் உற்பத்திகள் (சுறா முற்கள் போன்ற) வர்த்தகத்தை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தும். இவற்றுக்கு தற்சமயம் முகாமைத்துவ கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன ஆயினும் இவை பாரியளவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

CITES சாசனமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐP.எஸ்.பிளஸ் சலுகையின் கீழ் வரும் சாசனத்தில் ஒன்றாக  உள்ளதுடன் இலங்கை உட்பட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு மேலதிக வர்த்தக ஊக்குவிப்புகளையும் வழங்குகின்றது. இலங்கையானது இந்த சலுகையை 2010ஆம் ஆண்டு இழந்ததுடன், ஐP.எஸ்.பிளஸ் கரிசனையின் கீழ் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை நடைமுறைபடுத்துவதாக  உறுதியளித்ததன் பின்னர் அதனை 2017ஆம் ஆண்டில் மீண்டும் பெற்றுக்கொண்டது.

2009 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க இலங்கை விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புச்(திருத்தம்) சட்டம் மற்றும் 2003ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க சுங்கம்(திருத்தம்) சட்டம் அல்லது ஏனைய சட்ட ஏற்பாடுகள் ஆகியன வனசீவராசிகள் சட்டவிரோதமாக இடைநிலையில் மாற்றப்படல் அல்லது இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால்  கடத்திச்செல்லப்படுதல் செயற்பாட்டை தடுப்பதற்கான போதியளவு சட்ட ஏற்பாடுகளை வழங்குவதில்லை. இலங்கை ஊடாக சமீபத்தில் இடம்பெற்றுள்ள அநேகமான சட்டவிரோத வனசீவராசிகள் கடத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஏனைய கிழக்கு ஆசிய நாடுகளால் அவை தடுக்கப்பட்டும் உள்ளன. அதேவேளையில், சமீபகாலங்களில் வனசீவராசிகள் மாதிரிகள் இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலும் துரித கதியில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இலங்கை சுங்கச் சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகள் மற்றும் காணப்படும் வரையறுக்கப்பட்ட மூலங்கள் ஆகியவற்றுக்கு அமைவாக இலங்கை சுங்கமானது  இலங்கையின்  வெளியேறும் மையங்கள் ஊடாக (துறைமுகங்கள் மற்றும் விமானநிலையம்) சட்டவிரோதமாக வனசீவராசிகள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கடினமாக பணியாற்றுகின்றது. சமீபத்தில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பாரிய வனசீவராசிகள் கடத்தல் முறியடிப்பானது சர்வதேச கவனத்தையும் ஈற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டில், இலங்கை சுங்கமானது துபாயில் இடையில் மாற்ப்படவிருந்த ஆபிரிக்;க யானை தந்தங்கள் அடங்கியிருந்த கொள்கலனை பறிமுதல் செய்தது. 2014 ஆம் ஆண்டில் கிழக்கு ஆசியாவில் இடையில் மாற்றப்படவிருந்த கருங்காலி மரங்கள் அடங்கியிருந்த 28 கொள்கலன்களை தடுத்து நிறுத்தியது.

தென் ஆசிய பிராந்தியத்தில் முதற்தடவையாக, இலங்கையானது யானை தந்தங்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை 2016 சனவரி 26ஆம் திகதி அழித்தது. CITES இன் செயலாளர் நாயகமான ஜோன் ஈ ஸ்கேன்லன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் விசேட அததியாக வருகைதந்திருந்தார். இவர் தென் ஆசிய பிராந்தியத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட முதலாவது CITES இன் செயலாளர் நாயகம் ஆகும். ஸ்கேன்லன் அவர்கள் அத்தகைய பாரியவொரு யானை தந்தங்கள் அளவையும் பறிமுதல் செய்து அதனை பிரசித்தமாக அழித்த இலங்கை அதிகாரிகளை பாராட்டினார். இந்த நிகழ்வானது, 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து  இடம்பெற்ற எந்தவொரு நிகழ்வையும் விட உயர்ந்தளவு நேர்மறையான சர்வதேச ஊடக கவனத்தை ஈர்த்தது.

இலங்கைக்கான ஸ்கேன்லன் அவர்களின் விஜயத்தின் போது அவர்  இலங்கையில் CITES  ஐ நடைமுறை படுத்துவதற்கான உள்ள10ர் ஒழுங்குவிதி பற்றிய கலந்துரையாடல் ஒன்றை இலங்கை வனசீவராசிகள் அதிகாரிகளுடன் மேற்கொண்டார். தற்போதைய வகுப்பான 3 இருந்து விடுபட்டு வகுப்பு 1 ஐ அடைவதற்கு CITES உள்ளூர் ஒழுங்குவிதியை தயாரித்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

CITES CoP 8 ற்கான அனுசரணை வழங்கும் செயற்பாடானது, 182 நாடுகளை உள்ளடக்கிய  183 தரப்பினரை இலங்கையில் ஒன்றிணைக்கும் பாரிய மற்றும் சர்வதேச ஒன்றுகூடல் ஒன்றாக அமையும். இந்தியா CITES CoP 3 ற்கான அனுசரணையை 1981 ஆம் ஆண்டில் வழங்கியது. இலங்கையானது தென் ஆசிய பிராந்தியத்தில் மறுபடியும் இந்த CITES  ஐ 38 வருடங்களின் பின்னர் நடாத்தும்.

குறிப்பு2018: ஆயுதப்பரவல் மற்றும் அபிவிருத்தி மண்றம்,   ஆபத்திற்குள்ளாகும் வனசீவராசிகள்மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம்   பற்றிய சாசனம் மற்றும் இலங்கை.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close