ஆசியாவில் கலந்துரையாடல் மற்று ம் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் (CICA) இலங்கை உறுப்புரிமை பெறுகின்றது

ஆசியாவில் கலந்துரையாடல் மற்று ம் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் (CICA) இலங்கை உறுப்புரிமை பெறுகின்றது

Image -01

இலங்கையானது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் ஒரு உறுப்பினராக அதன் 26 உறுப்பு நாடுகளால், 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் திகதி பீஜிங்கில் இடம்பெற்ற வைபவமொன்றில், இலங்கையின் சீன மக்கள் குடியரசிற்கான தூதுவர்  கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, CICA மாநாட்டின் உறுப்பு நாடுகள் மற்றும் ஆல்மட்டி (Almaty) சட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான வழிகாட்டி உறவுகள்  பற்றிய கொள்கைப் பிரகடனம், மற்றும்  புதிய உறுப்பு நாடுகளால் முழு உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்கு அவசியப்படும் இரண்டு அத்தியாவசியமான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, CICA ஆனது நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு அவசியமான ஆசியாவின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் பல்-தேசிய மாநாடாக செயற்படுகின்றது. இலங்கையானது, CICAயின் அவதானிப்பு நாடொன்றாக 2012 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றது.

CICA உறுப்புரிமையானது இலங்கையின் இருதரப்பு உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் CICA யின் ஏனைய உறுப்பு நாடுகளிலுள்ள மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மேம்பாடடையச்செய்யும்.

CICA யின் உறுப்பு நாடுகளாவன, ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான், பஹ்ரைன், வங்காளதேசம், கம்போடியா, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மொங்கோலியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், கட்டார், கொரிய குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், உஸ்பகிஸ்தான், மற்றும் வியட்நாம் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன.

CICA யின் நடப்பு தலைமையை சீனா ஏற்றுள்ளதுடன் மாநாட்டின் செயலகமானது அஸ்தானா, கஸகஸ்தானில் தாபிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

17 ஆகஸ்ட் 2018
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close