வியட்நாமின் மத்திய வங்கி ஆளுநர் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு தெரிவித்தமை

வியட்நாமின் மத்திய வங்கி ஆளுநர் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு தெரிவித்தமை

வியட்நாமிற்கான இலங்கையின் தூதுவர்  பேராசிரியர் ஏ. சாஜ் யூ. மெண்டிஸ், வியட்நாம் ஸ்டேட் பேங்க் (SBV) என அழைக்கப்படும் வியட்நாம் மத்திய வங்கியின் ஆளுநர் Nguyen Thi Hong, SBV இன் தலைமை அலுவலகத்தில் சந்தித்த பொது, கடந்த 12 மாதங்களில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து நம்பிக்கையையும், ஊக்கமளிக்கும் உணர்வுகளையும் வெளிப்படுத்தினார். வியட்நாம் எதிர்கொண்டு, செயற்படுத்திய  நுண்ணிய மற்றும்  பேரண்டப் -பொருளாதார பிரச்சினைகள் மற்றும் பதில் நடவடிக்கைகள், கொள்கைகள் மற்றும் நிதியியல் மற்றும் பிஸ்கால்  கொள்கைகள் குறித்தும், கடந்த இரண்டு தசாப்தங்களாக வியட்நாம் அடைந்த பொருளாதார வளர்ச்சி குறித்தும், ஆளுநர் மற்றும் தூதுவர்கள் ஆகிய இருதரப்பினரும் விரிவான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர்.

 ஆளுநர் ஹாங், மதிப்புமிக்க "உலகளாவிய நிதியியல் " எனும்  இதழால், தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் மிகவும் பயனுறுதிமிக்க  மற்றும் திறமையான மூன்று மத்திய வங்கி ஆளுநர்களில், ஒருவராவார். இது SBV யால்  திறம்பட செயல்படுத்தப்பட்ட மற்றும் வினைத்திறன்மிக்க விளைவு சார்ந்த கொள்கைகளை பிரதிபலித்ததுடன், தூதுவர் மெண்டிஸ், இச்சாதனையை சந்திப்பின் போதும் எழுத்து மூலமும் பாராட்டினார். அதே குறிப்பில், கவர்னர் ஹொங், இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி P. நந்தலால் வீரசிங்க அவர்களுக்கும், “Global Financial Magazine”, இதழினால், உலகின் சிறந்த மற்றும் திறமையான மத்திய வங்கியாளர்களில் ஒருவராக, தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். கடந்த 12 மாதங்களுக்குள் பணவீக்கத்தை 65% இலிருந்து 5% ஆகக் குறைப்பதில் இலங்கை வெற்றியடைந்துள்ளதாகவும், வட்டி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்தல், உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு மற்றும் இலங்கையின் தேசிய நாணயத்தை நிலைப்படுத்துதல் போன்றவற்றிலும் இலங்கை வெற்றிபெற்றதாக ஆளுநர் ஹொங் குறிப்பிட்டார். வியட்நாம், இன்று, உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளதுடன், இதனால் உலகெங்கிலும் உள்ள பெரிய முன்னேறிய பொருளாதாரங்கள் மற்றும் பெரிய பன்னாட்டு  நிறுவனங்களின், கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை குறிப்பிட்டார். எந்தவொரு வளர்ச்சியடைந்த அல்லது வளர்ச்சியடைந்துவரும் தேசத்தின் மத்திய வங்கியும், அந்நாட்டின் பொருளாதாரத்தை உரிய பாதையில் வழிநடத்திச்செல்வதில், செல்வாக்குமிக்க மற்றும் முக்கிய பங்கை வகிக்கிறது என்று அவர் கூறினார். 1990 களில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 90 அமெரிக்க டொலர்களாக இருந்த வியட்நாம், இன்று 4,450 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது, அதே போல் 2022 ஆம் ஆண்டில் 370 பில்லியன் டொலர் ஏற்றுமதி உட்பட இருதரப்பு வர்த்தகம் 730 பில்லியன் டொலர்களுக்கு  அதிகமாக உள்ளது. வியட்நாம் பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் வேலையின்மை போன்ற மிகவும் ஈர்க்கக்கூடிய பொருளாதார குறிகாட்டிகலின் சிறந்த பெறுபேறுகளுடன், பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை சிறப்பாக பராமரிக்கிறது.

 2022 ஆம் ஆண்டில் வியட்நாம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றதுடன், 2023 இல் அது 30 வரையில் உயர்ந்ததுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் FDI நாட்டிற்கு வருவதற்கான சூழலை உருவாக்குவதில் SBV முக்கிய மற்றும் தீர்க்கமானதொரு பங்கை வகித்தது என்றும் தூதுவர் மெண்டிஸ் கூறினார். உள்நாட்டில் காணப்படும் சில பெரிய தொழில் நிறுவனங்கள், வியட்நாமில் கணிசமான முதலீடுகள் மற்றும் FDI களை செய்துள்ளன, மொத்த FDI பங்கு USD 450 பில்லியன் ஆகும்.

வியட்நாமின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக  17 முக்கிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் அது கொண்டுள்ள FTAகள் மற்றும் கூட்டுறவு  ஒப்பந்தங்கள் என்று ஆளுநரும் தூதுவரும் ஒப்புக்கொண்டனர். இலங்கையும் தெற்காசியாவின் முக்கிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் பல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் செயல்முறையில் உள்ளது. வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் மற்றும் தூதர் இருவரும் கருத்து பரிமாறிக்கொண்டனர்.

இலங்கை தூதரகம்

ஹா நோய்

21 செப்டம்பர் 2023

 

Please follow and like us:

Close