புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் குறுகிய கால வீசாவையுடையவர்களை முறையாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் குறுகிய கால வீசாவையுடையவர்களை முறையாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான தீர்மானங்கள் குறித்து, 2020 மே 21ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் அமர்வில் அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கௌரவ. வைத்தியர். ரமேஷ் பத்திரன பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்:

'வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவது குறித்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அமைச்சரவைக் குறிப்பொன்றை சமர்ப்பித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 4,500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இது தவிர, இலங்கைக்கு நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் தற்போது சுமார் 41,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். இந்த 41,000 இலங்கையர்களை முறையாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இருப்பினும், நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தவரை, அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. தனிமைப்படுத்தல் மையங்களின் நிபந்தனைகளுக்கு அமைய, நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான இந்தச் செயற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். எவ்வாறாயினும், புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ளவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் அடுத்த சில நாட்களுக்குள் மீள அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இந்தோனேசியாவிலிருந்து மே 21ஆந் திகதியும், அதிக ஆபத்திலுள்ள இலங்கையர்களை பங்களாதேஷிலிருந்து மே 23ஆந் திகதியும், ரஷ்யாவிலுள்ள இலங்கை மாணவர்களை மே 22ஆந் திகதியும், கட்டாரிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களை மே 26ஆந் திகதியும், பெலாரஸிலுள்ள மாணவர்களை மே 28ஆந் திகதியும், மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவிலுள்ள ஏனைய இலங்கையர்களை முன்னுரிமை அடிப்படையிலும் நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்குத் தேவையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாலைதீவில் சுமார் 6,870 இலங்கையர்கள் வசித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் இலங்கைக்கு மீள அழைத்து வருவது தொடர்பாக மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவிலுள்ள இலங்கையர்கள் மீது சிறப்பான கவனம் செலுத்துமாறு அதிமேதகு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். எனினும், அவர்கள் முறையாக மீள அழைத்துவரப்படல் வேண்டும் என்பதை நாங்கள் தெரிவிக்க வேண்டும். இது தவிர, வெளிநாடுகளில் சுமார் 4040 பேர் குறுகிய கால வீசாக்களில் உள்ளனர். அவர்களுக்கும் இலங்கைக்குத் திரும்புவதற்கான அவசரமான சூழ்நிலைகள் உள்ளன. அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நோக்கத்திற்காக எந்தவொரு சிறப்பு விமானங்களையும் அனுப்பி வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. அவர்களது வீசாக்கள் காலாவதியானதன் விளைவாக, அவர்களது தங்குமிடம் தொடர்பாக கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளதால், அந்த இலங்கையர்களை குறித்த நாடுகளிலிருந்து மீள அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமையளிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.'

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close