இலங்கைத் தூதரகம் இரத்தினதீப சர்வதேச புலம்பெயர்ந்தோர் சபையுடன் இணைந்து பொது இராஜதந்திர சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக மே தினத்திற்கான திறமை நிகழ்ச்சி மற்றும் பஸார் ஆகியவற்றை ஏற்பாடு செய்தது. இலங்கை புலம்பெயர் தொழ ...
Author Archives: Aseni Jayawardhana
மியன்மாருக்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்பு
மியன்மாருக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஜே.எம். ஜனக பிரியந்த பண்டார 2022 மே 02 ஆந் திகதி யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றவுடன் தூதுவராலய ஊழியர்களிடம் உ ...
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் திமோர்-லெஸ்தே ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றுக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவல்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் திமோர்-லெஸ்தே ஜனநாயகக் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பான கூட்டு அறிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று, 2022 மே 04, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடு ...
தூதுவர் கலாநிதி பாலித கொஹொன மொங்கோலியா ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கடிதத்தை கையளிப்பு
மொங்கோலியாவுக்கான தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தூதுவர் கலாநிதி. பாலித கோஹோனா, 2022 ஏப்ரல் 27ஆந் திகதி மொங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னாவிடம் தனது நற்சான்றிதழ் கடிதத்தை கையளித்தார். நற்சான்றிதழ் வழங்கு ...
இராஜதந்திரம் தொடர்பான பயிற்சி பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் முன்னெடுப்பு
வழக்கமான மேம்படுத்தும் திறன்களின் முக்கியத்துவத்தை கணக்கில் கொள்வதற்காக, தூதரகத்தின் கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்களின் கீழ், ஜொயெல்லா அஸிஸ் மொழிபெயர்ப்பு நிறுவனத்துடன் இணைந்து, லெபனானின் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் ...
மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இராஜதந்திர விளக்கம்
2022 ஏப்ரல் 26ஆந் திகதி இடம்பெற்ற தூதுவர்கள் குழுவுடனான சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மற்றும் ஜனநாயகம் மற ...
பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீனா இலங்கை சங்கம் மற்றும் பெய்ஜிங் வான்ஹோங்டாய் டெக்னொலொஜி குரூப் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பெய்ஜிங்கில் முதல் இலங்கை தேநீர் கடை மற்றும் கலாச்சார நிலையத்தை 2022 ஏப்ரல் 20ஆந் திகதி பெய்ஜிங்கில் உள்ள பெறுமதி வாய்ந்த சொயங்க மாவட்டம், சியு ஷூய் வீதியில் திறந்து வைத்தது. பெரிய வெளிப்புறப் பகுதியைக் கொண்ட கடை, தூதுவருக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவையும், ரப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் நினைவுகூரும் வகையில் தூதுவரகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்த முயற்சியும் ஒன்றாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர், அரச அதிகாரிகள், பெய்ஜிங்கில் உள்ள தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் சீன வணிக சமூகத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பெய்ஜிங்கிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில், இது சீனாவில் சிலோன் தேயிலையை ஊக்குவிக்கும் முன்னோடி முயற்சி என்றும், சீனா இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு சங்கம் மற்றும் பெய்ஜிங் வான்ஹோங்டாய் டெக்னொலொஜி குரூப் லிமிடெட் நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார். இதுவே சீனாவின் முதல் சிலோன் தேநீர் கடை மற்றும் கலாச்சார நிலையம் ஆவதுடன், பலர் இதைப் பின்பற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். சிலோன் தேயிலையை ருசித்து இளைப்பாற தேநீர் கடைக்கு தமது நண்பர்களை அழைத்து வருமாறு தூதுவர் கலந்துகொண்டவர்களுக்கு அழைப்பு விடுத்தார். சிலோன் தேயிலை அதன் தனித்துவமான சுவை மற்றும் வாசனை காரணமாக சிறந்த கறுப்புத் தேயிலைகளில் ஒன்றாவதுடன், உலகின் கறுப்புத் தேயிலைகளில் முன்னணியில் உள்ளது. இரண்டாம் செயலாளர் (தேயிலை ஊக்குவிப்பு) சம்பத் பெரேரா சிலோன் தேயிலையை தயாரித்துக் காட்டினார். சிலோன் தேயிலை உற்பத்தி செய்யும் இலங்கையின் ஏழு பகுதிகள் மற்றும் அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். பின்னர் அழைக்கப்பட்டவர்களுக்கு இலங்கை உணவு வகைகளும் சிலோன் தேயிலையும் வழங்கப்பட்டது. இலங்கைத் தூதரகம், பெய்ஜிங் 2022 ஏப்ரல் 27
பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீனா இலங்கை சங்கம் மற்றும் பெய்ஜிங் வான்ஹோங்டாய் டெக்னொலொஜி குரூப் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பெய்ஜிங்கில் முதல் இலங்கை தேநீர் கடை மற ...