தொழில்னுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்

தயவுசெய்து நோக்கவும்உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்ட நிறுவனங்களினால் சான்றுப்படுத்தப்பட்ட சான்றிதழ்களின் உண்மைப் பிரதியுடன் சேர்த்து உண்மையான சான்றிதழும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
  • பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்ட நிறுவனங்களினால் சான்றுப்படுத்தப்பட்ட சான்றிதழ்களின் உண்மைப் பிரதியானது, பயிற்சிநெறி நடாத்தப்பட்ட போது நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதனை குறிப்பிடுகின்ற மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி கல்வி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட கடிதம் ஒன்றுடன் சேர்த்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • சான்றிதழில் குறிக்கப்பட்டிருக்கும் கற்கை நெறியின் பெயரும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி கல்வி ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பெயரும் ஒரேமாதிரியாக இருத்தல் வேண்டும்.

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close