கொலம்பியாவில் ஈ.எல்.என் (ELN) இனால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்

கொலம்பியாவில் ஈ.எல்.என் (ELN) இனால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்

இலங்கை அரசாங்கமானது கொலம்பியா, பொகோடாவில் அமைந்துள்ள பொலிஸ் கல்லூரி மீது 2019 சனவரி 17ஆம் திகதி ஈ.எல்.என் (ELN) இனால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள், பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அத்தாக்குதல் காரணமாக காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திக்கின்றனர்.

கொலம்பிய அரசாங்கத்திற்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் அதேவேளையில் இலங்கை அரசாங்கமானது, பயங்கரவாத அச்சுறுத்தலை அதன் சகல வடிவங்களிலும் பயனுறுதியான முறையில் தோற்கடிக்க சர்வதேச சமூகத்தை கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2019 ஜனவரி 31

Please follow and like us:

Close