மிண்டானோவில் இலங்கையின் கௌரவத் தூதுவர் நியமனம்

மிண்டானோவில் இலங்கையின் கௌரவத் தூதுவர் நியமனம்

பிலிப்பைன்ஸ் குடியரசின் உடன்படிக்கையுடன், தாவோ பிராந்தியம், ஜம்போங்கா, வடக்கு மின்டானோ, சோக்ஸ்கார்ஜென் மற்றும் கராகாவின் தூதரக அதிகார வரம்புடன், மிண்டனாவோவில் இலங்கையின் கௌரவத் தூதுவராக வில்லியம் சென் என்பவரை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு நியமித்தது.

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, 2022 டிசம்பர் 14ஆம் திகதி தூதரகத்தில் வைத்து கௌரவத் தூதுவர் சென்னிடம் நியமனக் கடிதத்தை முறைப்படி கையளித்தார்.

வில்லியம் சென், தலைமை நிதி அதிகாரி (ரியல் ஸ்டீல் கூட்டுத்தாபனம்), தலைவர் (ரியல் எனர்ஜி கூட்டுத்தாபனம்), தலைமை நிறைவேற்று அதிகாரி (ஸ்டார்க் டிஃபென்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டுத்தாபனம், ஸ்டீல் அண்ட் அம்மோ கூட்டுத்தாபனம், டைரோ சோர்டா ஷூட்டிங் ரேஞ்ச் மற்றும் கன் கிளப் இன்க்.) மற்றும் பணிப்பாளர் (உனா கிராண்டே டியர்ரா டெவலப்மென்ட் கூட்டுத்தாபனம்) ஆகிய பதவிகளை வகிக்கும் ஒரு ஆற்றல்மிக்க தொழிலதிபராவார்.

அவர் சான் சைமன் வணிக சபையின் கல்வி மற்றும் மேம்பாட்டுத் தலைவராகவும், பிலிப்பைன்ஸ் இண்டக்ஷன் ஸ்மெல்டிங் தொழில் சங்கத்தின் பொருளாளராகவும் உள்ளார்.

மிண்டானோவில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவராக, அவர் நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளில் முன்னணியில் இருப்பதுடன், பிராந்தியத்தில் உள்ள இலங்கை சமூகத்தின் நலன்களைப் பின்தொடர்வார்.

மிண்டானாவோ வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான ஒரு பெரிய உணவு மையமாகவும், வளர்ந்து வரும் மையமாகவும் கருதப்படுவதுடன், குறிப்பாக மெட்ரோ டாவோவின் வணிக மையத்தில், தூதரகத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2022 டிசம்பர் 16

Please follow and like us:

Close