பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பிலிப்பைன்ஸின் வெளிவிவகாரச் செயலாளரை (அமைச்சர்) பிரியாவிடை நிமித்தம் சந்திப்பு

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பிலிப்பைன்ஸின் வெளிவிவகாரச் செயலாளரை (அமைச்சர்) பிரியாவிடை நிமித்தம் சந்திப்பு

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, பிலிப்பைன்ஸின்  வெளிவிவகாரச் செயலாளர் (அமைச்சர்) என்ரிக் ஏ. மனலோவை தனது பணியின்  நிறைவில் சந்தித்து விடைபெற்றார்.

தூதுவர் குணசேகரவின் பதவிக்காலத்தில் பிலிப்பைன்ஸ் - இலங்கை உறவுகளை  வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக செயலாளர் மனலோ தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

தூதரகத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காக தூதுவர் குணசேகர பிலிப்பைன்ஸின்  வெளிவிவகாரத் திணைக்களத்திற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் முன்னேற்றமடையும் எனத் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2022 டிசம்பர் 13

Please follow and like us:

Close