கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக கலாநிதி அலிரேசா டெல்கோஷ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2023 அக்டோபர் 24ஆந் திகதி காலை 12.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2023 அக்டோபர் 24
Please follow and like us: