தூதுவர் கொலம்பகே பொருளாதார கூட்டுறவை ஊக்கப்படுத்தும் நோக்கில் APINDO  வின் தலைவியை சந்தித்தமை

 தூதுவர் கொலம்பகே பொருளாதார கூட்டுறவை ஊக்கப்படுத்தும் நோக்கில் APINDO  வின் தலைவியை சந்தித்தமை

இந்தோனேஷியா மற்றும் ASEAN இற்கான இலங்கை தூதுவர் மாண்புமிகு அத்மிரால் ஜயநாத் கொலம்பகே, இந்தோனேஷியா தொழில் வழங்குனர் சங்கத்தின் (APINDO) தலைவி திருமதி. ஷின்டா W. கம்தானியுடன், 2023 ஆகஸ்ட் 18 அன்று APINDO தலைமையகத்தில் வினைத்திறனான சந்திப்பொன்றை நிகழ்த்தினார்.

தூதுவரின் உரையின் போது, தற்போதைய இலங்கையின் பொருளாதார நிலவரம், கொழும்பு துறைமுக நகரம், மருந்துகள், துணி மற்றும் உற்பத்தித்துறை உள்ளடங்கலாக இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்,  இந்தோனேஷியா நிறுவனங்களில் இலங்கையின் முதலீடுகள், இலங்கை நிறுவனங்களின் கொள்முதல் அறிவிப்புக்களில் ஈடுபடுவதற்கு இந்தோனேஷிய நிறுவனங்களை ஊக்கப்படுத்துமாறு கோரிக்கை, வணிக்கங்களுக்கிடையிலான சந்திப்புக்களை ஒழுங்கமைத்தல் உள்ளடங்கலாக இருதரப்பு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான கூட்டுறவு முயற்சிகள், "படகு & கடல் கண்காட்சி-2023 " மற்றும், " FACETS இலங்கை சர்வதேச இரத்தின  மற்றும் ஆபரண கண்காட்சி" ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக APINDO அங்கத்தவர்களுக்கு அழைப்பு விடுத்தல், போன்ற முக்கிய விடயங்கள் மேற்கோள் காட்டபட்டன.

மேலதிகமாக இருவருக்கிடையிலான கலந்துரையாடலானது, இந்தோனேஷியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்களின் சாத்தியப்பாடுகள், முன்னுரிமை வர்த்தக  உடன்படிக்கை (PTA), பிராந்திய ரீதியான பொருளாதார பங்குடைமை (RCEP), துறைசார் உரையாடற் பங்குதாரர் ஆகின்றமை (SDP) போன்ற விடயங்களை மையமாகக் கொண்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.

பதில் கருத்து தெரிவித்த திருமதி.ஷிண்டா W. காம்தானி, இந்தோனேஷிய அரசாங்கத்தின், இலங்கையுடனான பிணைப்பிலுண்டான முதலீடுகள் மீதான ஊக்கத்தை வலியுறுத்தியதுடன், இரு நாடுகளின் வணிக நிறுவன பிரதிநிதிகளின் பொருத்தப்பாடுகளை சிறந்த பிரதிபலன் நோக்கில், இணைத்து அவற்றை மேம்படுத்தும் அமர்வுகளை செவ்வனே மேற்கொள்வதற்கு, APINDO வின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார். மேலும் APINDOவின் கடல்சார் பொருளாதாரம் மீதான அளப்பரிய நாட்டம் வலியுறுத்தப்பட்டது, குறிப்பாக கடல்சார் உணவு மூலங்கள் பற்றிய ஆய்வுகளில் இந்தோனேஷியாவின் ஈடுபாட்டினை உதாரணமாக குறிப்பிடலாம்.

பரஸ்பர செளபாக்கியத்தை இருநாட்டு பொருளாதார தொடர்புகள் மற்றும் கூட்டுறவினை வலுவூட்டல் மீதான அர்ப்பணிப்பு போன்ற விடயங்களுடன் கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது.

சர்வதேச தொடர்புகளின் தலைவர் திருமதி. கதரீனா விட்ஜாஜா, APINDO வின் உதவி செயலாளர் திரு.ஹென்றா விட்ஜாஜா, இரண்டாவது செயலாளர் (வர்த்தகம்) திருமதி. ஹேஷானி பிரேமதிலாக, மக்கள் இராஜாங்க அதிகாரி செல்வி. நூருல் அஜீஸா, போன்ற இந்தோனேஷியாவின் இலங்கை தூதரக பிரதிநிதிகள் உள்ளடங்கலாக புகழ்பெற்ற நபர்கள் இச்சந்திப்பிற்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கை தூதரகம்

ஜகார்தா

2023 ஆகஸ்ட் 21

Please follow and like us:

Close