முன்னராக இன்றைய தினம் சென்னையிலிருந்து 03:00 மணிக்கு புறப்பட்ட மற்றுமொரு பிரத்தியேக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 97 பௌத்த யாத்திரிகர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்ததுடன், மொத்தமாக 145 யாத்திரிகர்கள் மார்ச் 22 ஆந் திகதி இலங்கைக்கு நாடு திரும்பினர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் யு.எல். 196 மூலமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 21ஆந் திகதி 19:31 மணிக்கு மொத்தமாக 298 யாத்திரிகர்கள் புதுடில்லியிலிருந்து புறப்பட்டனர்.
உள்நாட்டு வர்த்தக பயணிகள் விமானங்களுக்காக இலங்கை விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த நேரத்தில், இந்தியாவில் சுமார் 1500 இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் இருந்தனர். அப்போதிலிருந்து, முன்னர் அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக விமானங்கள் மூலமாகவும், பின்னர் சிக்கித் தவித்த யாத்திரிகர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்காக செயற்படுத்தப்பட்ட பிரத்தியேக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் மூலமாகவும் இந்த யாத்திரிகர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
மார்ச் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில், புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் பௌத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, யாத்திரிகர்கள் நாட்டிற்கு திரும்பி வருவதற்கான வசதிகளை வழங்குவதற்காக புதுடில்லி மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்களுடனும், மற்றும் சுற்றுப்பயணக் குழுக்களுடனும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டன. யாத்திரிகர்களின் டிக்கெட்டுக்களை மறுசீரமைத்தல், மற்றும் டில்லி மற்றும் சென்னையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் வழங்கப்படும் உதவிகள் ஆகியன இந்த முயற்சிகளில் உள்ளடங்குகின்றன.
சிக்கித் தவித்த யாத்திரிகர்களை வெற்றிகரமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு உதவியமைக்காக, வெளிவிவகார அமைச்சு மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய அரசின் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், டில்லி மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்கள், இந்தியாவிலுள்ள இலங்கையின் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த யாத்திரிகத் தளங்களில் வசிக்கும் மரியாதைக்குரிய துறவிகள் மற்றும் புதுடில்லியிலுள்ள இலங்கை பௌத்த யாத்திரிகர்களின் ஓய்வு இல்லங்கள் ஆகியவற்றுக்கு புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன தமது ஆழ்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றது.