ஆபிரிக்க விவகாரங்கள் பிரிவு
ஆபிரிக்கக் கண்டத்திலும், ஆபிரிக்க ஒன்றியத்திலுமுள்ள 54 நாடுகளுடனான உறவுகள் சார்ந்த விடயங்களை ஆபிரிக்க விவகாரங்கள் பிரிவு மேற்கொள்கின்றது.
பின்வரும் அரசியல் மற்றும் சமூக – பொருளாதார அபிவிருத்திகளிலும், இந்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைப்பதிலும் இந்த பிரிவு செயற்படுகின்றது.
மேலும், இந்த நாடுகளுடனான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூக விடயங்களில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை இந்தப் பிரிவு வழிநடத்துகின்றது. தொழினுட்ப ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி உதவி, முதலீட்டு உறவுகள், இருதரப்பு, பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் வாயிலான சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாடு போன்றன இந்தப் பிரிவின் பொறுப்புக்களின் பகுதியாகும்.
இந்தப் பிராந்தியத்தில் 6 வதிவிடத் தூதரகங்களை இலங்கை கொண்டுள்ளது. (எகிப்து, தென்னாபிரிக்கா, நைஜீரியா, கென்யா, சீஷெல்ஸ், எத்தியோப்பியா).