வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளுக்கான செயற்பாட்டுக் கையேட்டைப் புதுப்பித்தல் குறித்த கருத்தரங்கில் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆற்றிய உரை, செப்டம்பர் 18 - 20, கோலாலம்பூர், மலேசியா

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளுக்கான செயற்பாட்டுக் கையேட்டைப் புதுப்பித்தல் குறித்த கருத்தரங்கில் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆற்றிய உரை, செப்டம்பர் 18 – 20, கோலாலம்பூர், மலேசியா

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நாடு - ஒரு குழு அணுகுமுறை: 'சொல்லுக்கேற்ப செயலாற்றல்'

கௌரவ வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்களே,

தூதரகங்களில் தலைவர்களே மற்றும் இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் நலனுக்குப் பொறுப்பான அதிகாரிகளே,

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் அவர்களே மற்றும் அணியினரே,

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் அவர்களே மற்றும் அதிகாரிகளே,

மற்றும் இந்த நடவடிக்கையை நிர்வகிப்பதற்கு உதவிய மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊழியர்களே,

2011 முதல் இலங்கையில் இயங்கி வரும் 'நல்லாட்சி மூலம் ஒழுக்கமான பணிகளை ஊக்குவித்தல்' குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக சரியான நேரத்தில் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தமைக்காக தொலைதொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றுக்கு ஆரம்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை சாத்தியமாக்கிய சுவிஸ் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கு நான் குறிப்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2012 - 2018 வரை நான் ஜெனீவாவில் பணியாற்றிய காலகட்டத்தில் இந்த இரு நிறுவனங்களுடனும் நெருக்கமாக பணியாற்றியுள்ளமையினால், வெளிநாடுகளில் குடியேறியவர்களின் நலன்களை மேலும் மேம்படுத்துவதற்கான எமது முயற்சிகளைத் தொடர முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

தொழிலாளர் நலனுக்கான இந்த செயற்பாட்டுக் கையேட்டை புதுப்பிப்பதில் பணியாற்றி வரும் குழுவை நான் வாழ்த்த விரும்புகின்றேன். எமக்கு முன் உள்ள ஆவணமானது, முக்கியமாக எமது மக்கள் தொகையில் சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான (இலங்கையின் மக்கள்தொகையில் 10%) திறமையற்ற மற்றும் அரைத் திறமையான மற்றும் ஜி.சி.சி. யில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகள், கவலைகள் மற்றும் நலன்களை முக்கியமாக மேற்பார்வை செய்வதனால், முக்கியமானதொரு பொறுப்பை வகித்துள்ளது. திறமையான தொழில்முறை வகைகளுடன் ஒப்பிடுகையில், இந்தக் குழு, உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி அல்லது அந்நிய நேரடி முதலீட்டை விடவும் மிகவும் அதிகமான, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.9% ஆன 7 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நிய செலாவணியை 2018 ஆம் ஆண்டில் வழங்கிய இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகும். 

இந்த புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு உதவுவதற்காக தூதரகத் தலைவர்களின் தலைமையில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் இரண்டாம் நிலை அதிகாரிகள் பணியாற்றும் 16 முன்னணித் தூதரகங்கள் இந்தக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளன. ஒரு பொதுவான நோக்கத்திற்காக எமது முயற்சிகளை ஒன்றிணைக்க வௌ;வேறு பங்குதாரர்கள் முயற்சித்துள்ளனர். இலங்கையில் குடியேற்றத்தை நிர்வகிப்பதற்கான விரிவான மற்றும் குறுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முழுமையான பொறிமுறை மற்றும் முயற்சிகள் காணப்படுகின்றன மற்றும் எம்மிடம் நல்லதொரு இடம்பெயர்வு ஆளுகைக் கட்டமைப்பு காணப்படுகின்றது என்ற நம்பிக்கையில் நாம் திருப்தியடைய முடியாது என்பதில் நான் முழுமையாக உடன்படுகின்றேன். 

இன்று நான் 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நாடு - ஒரு குழு அணுகுமுறை' என்ற தலைப்பில் உரையாற்றுமாறு கோரப்பட்டுள்ளேன். அது மிகவும் ஆரவம் மிகுந்த விடயப்பரப்பாகும். இருப்பினும், அதை மேலும் உறுதியானதாக மாற்றுவதற்காக, 'சொல்லுக்கேற்ப செயலாற்றல்' என்ற 3 சொற்களை அதில் சேர்க்க விரும்புகின்றேன்.

இது எமது சட்டங்கள் மற்றும் கையேடுகளில் உள்ளதை எடுத்துக்கொள்வதோடு, இடம்பெயர்வுகளை நிர்வகிப்பதில் தொடர்ச்சியான முயற்சிகளினூடாக ஒரு 'முழுமையான அரசாங்க அணுகுமுறையை' உருவாக்குவதற்கும், எமக்கு பிரச்சினைகள் உள்ளபோதும், குறைந்து வருவதற்கான காரணங்களிலும் அவற்றை எவ்வாறு செயற்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவதற்கும் இது எங்களுக்கு வாய்ப்பளிக்கும். 

இந்த நோக்கத்திற்காக, எனது பார்வையில் நாம் சில உறுதியான நடவடிக்கைகளை முன்னெஎடுக்க வேண்டும்.

முதலாவதாக, குறிப்பாக வெளிப்புற தொழிலாளர் இடம்பெயர்வு நாடு என்ற வகையிலான பிறப்பிடமான நாடாக எமது பலங்களை அடையாளம் காணுதல்

இரண்டாவதாக, பலவீனங்களையும் சவால்களையும் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை மதிப்பிடுதல்

மூன்றாவதாக, ஒருபுறம் எமது அனுபவங்களின் மூலம் பங்களிக்க முடியும் அதே நேரத்தில் சுழற்சி இடம்பெயர்வுக்கு பதிலளிக்கும் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான நன்மைகளைப் பயன்படுத்த, இடம்பெயர்வு நிர்வாகத் துறையில் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களின் பின்னணியில் எமக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கண்டறிதல்.

இந்தத் துறையிலுள்ள வல்லுநர்களால் பலமுறை கூறப்பட்டபடி, இடம்பெயர்வு என்பது இனி ஒரு புனைக்கதை அல்லது ஒரு நிகழ்வு அல்ல. இது மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த, மற்றும் நிறுத்த முடியாததொரு பகுதியாகும். இடம்பெயர்வுகளை சிறப்பாக நிர்வகிப்பதே மனித இயக்கம் மற்றும் பன்முகத்தன்மையின் நன்மைகளை பெற்றுக்கொண்ட சமூகங்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஒரே வழியாகும். அதன் எல்லைகளை பாதுகாப்பதற்கும், யாரை ஏற்றுக்கொள்வது மற்றும் யாரை வெளியே வைத்திருப்பது அல்லது அவர்களின் பிரதேசம் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் விதிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட அரசுகளின் இறையாண்மை உரிமைக்கு இடையில் சர்வதேச பாதுகாப்பை நாடுவோருக்கு சரியான சமநிலையைப் பேணுகையில் நாம் அதை எவ்வாறு செய்ய முடியும்?

'ஒரு நாடு - ஒரு அணி' என்று நாம் எவ்வாறு பதிலளிப்போம் என்பதற்கான முதலாவது பரீட்சை இது என்பது எனது கருத்தாகும்.

முன்பு கூறியது போல, அவ்வாறு செய்வதற்கான எமது பலம் பலவுள்ளன.

 ஒரு நாடாக குடியேற்றத்தை ஒரு முன்னுரிமையாக நாம் அடையாளம் கண்டுள்ளதுடன், பல வலுவான கொள்கை உத்தரவுகளுக்கு இதுவே காரணமாக அமைவதுடன், நிறுவன வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில் தேசிய தொழிலாளர் இடம்பெயர்வுக் கொள்கையும் உள்ளடங்கும் - இலங்கைத் தூதரகங்களும் தொழிலாளர் கையேட்டை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளதுடன், இந்தக் கருத்தரங்கைத் தொடர்ந்து அதனைப் புதுப்பிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

ஐ.நா. அமைப்பு உட்பட பல கூட்டாளர்களின் ஆதரவு மற்றும் நல்லெண்ணத்தால் நாங்கள் பயனடைந்துள்ளோம். ஐ.நா. அமைப்பினை ஒன்றாக வழங்க முற்படும் இந்தக் கட்டத்தில், நாடு சார்ந்த மட்டத்தில் செயற்படும் தனிப்பட்ட நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. ஐ.நா. உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்ட குடியேற்றத்திற்கான முதலாவது தன்னார்வக் கட்டமைப்பாக இடம்பெயர்வு தொடர்பான உலகளாவிய கூட்டமைப்பு செயற்பட்டு வருவதனால், நாடு ரீதியான மட்டத்திலான ஐ.நா. முகவர் நிறுவனங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைமையிலான உலகளாவிய இடம்பெயர்வு வலையமைப்பு அனுமதிக்கும். ஐ.நா. பொறிமுறையின் இந்த புதிய வளர்ச்சி எமக்கு என்ன வாய்ப்புக்களை அளிக்கின்றன என்பது குறித்து சிறிது நேரம் கழித்து நான் விரிவாகக் கூறுவேன்.

இலவசக் கல்வி முறைமையுடன், ஒரு திறமையான தொழிலாளர் சக்தியாக மாறுவதற்கு எளிதில் பயிற்சியளிக்கக்கூடிய ஒரு கல்வியறிவுள்ள தொழிலாளர் சக்தி எம்மிடம் உள்ளதுடன், இதன் மூலம் போட்டித் தொழிலாளர் சந்தையில் ஒரு முக்கிய இடத்தைக் காணலாம். இந்த சூழலில், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் தூதரக ஆதரவை வழங்குவதற்கும் வழக்கமான மற்றும் அன்றாட வேலைகளைத் தவிர்த்து, இந்த மன்றத்தில் கலந்து கொள்ளும் அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களும் சந்தை வாய்ப்புக்கள் மற்றும் போக்குகளைக் கவனிக்க வேண்டும். கௌரவ அமைச்சர் அவர்களே, இது நாம் போதுமான கவனம் செலுத்தாத ஒரு பகுதியாகும், எனினும் நாம் எமது தொழிலாளர் சந்தைத் திறனை மேம்படுத்த விரும்பினால் இது ஒரு முக்கியமான அம்சமாகும். இது சிறந்த ஊதியம் பெறும் தொழில்களுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், எமது தொழிலாளர்களின் பாதுகாப்பு, காவல் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் தொழில்களுக்கும் உத்தரவாதமளிக்கும்.

குறிப்பாக வேலைவாய்ப்பு மற்றும் ஒழுக்கமான வேலையின் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலான இலக்கு 8 தொடர்பில் குறிப்பிடுகையில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் நாம் கணிசமான முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், அங்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு தலைமை வகிபாகத்தினை வகிக்கின்றது. கட்டாய உழைப்பு மற்றும் நவீன அடிமைத்தனத்தைத் தடுப்பதில் கூட்டணி 8.7 இல் இலங்கை ஒரு செயற்பாட்டுப் பங்காளராகும். நாங்கள் ஒரு உயர் நடுத்தர வருமான நாடாக மாறியுள்ள நிலையில், ஒழுக்கமான வேலை மற்றும் தொழிலாளர் தரத்தை உறுதி செய்வதற்கான பலங்கள் இலங்கைக்கு ஒரு வலுவான புள்ளியாக இருக்கும். மேலும், நன்கு நிர்வகிக்கப்பட்ட இடம்பெயர்தல் கொள்கைகள் மூலம் பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் பொறுப்பான இடம்பெயர்வு குறித்து நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 10.7 இல் பணிபுரிவதானது, பெற்றுக் கொள்ளும் நாடுகளில் எமது சொந்த பணிக்குழுக்களைப் பாதுகாக்க உதவுகின்றது.

1. கொழும்பின் நிறைவை சரியாகப் பெறுதல்

எமது திறனை மேலும் மேம்படுத்துவதற்கு நாங்கள் பாடுபடுகையில், இடம்பெயர்வுத் துறையில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் அல்லது சவால்களை சிறப்பாக எதிர்கொள்வதற்காக நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய பலவீனமான பகுதிகள் குறித்து நாம் சுயவிமர்சனம் செய்ய வேண்டும். உதாரணமாக, இடம்பெயர்வைக் கையாளும் தற்போதைய நிறுவனங்களில் நான் தங்கியிருந்தால், அதை பல்வேறு தேசிய முகவர்களால் வடிவமைக்கப்பட்டு இயங்கும் 'கொள்கைகளின் சிலந்தி வலை' என சிறப்பாக விளக்க முடியும். இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் பொருளாதார புலனாய்வுப் பிரிவு நடாத்திய 2018 இடம்பெயர்வு ஆளுமைக் குறியீட்டில், இடம்பெயர்வு நிர்வாகத்தின் முக்கிய அம்சங்கள் தனிமையில் கையாளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வெளிச்செல்லும் இடம்பெயர்வு மற்றும் உள்வரும் இடம்பெயர்வு ஆகியன இரண்டு வௌ;வேறு அமைச்சுக்களால் கையாளப்படும் அதே நேரத்தில் எல்லை முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோர் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான ஒட்டுமொத்த தரவு முகாமைத்துவம் ஆகியன முந்தைய இரண்டு முகவர்களிடமிருந்து ஓரளவு துண்டிக்கப்பட்டு தொலைவாக காணப்படுகின்றது. இடம்பெயர்வு தொடர்பான நடவடிக்கைகளில் தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியன தமது சொந்த விருப்பப்படி பங்கேற்று, தற்காலிக அடிப்படையில் அரசாங்க முயற்சிகளில் சிறந்த முறையில் இணைகின்றன. அகதிகளைப் பொறுத்தவரை, நாம் அதை ஒரு விடய அடிப்படையில் எடுத்துக்கொள்வதுடன், இந்த விடயத்தை கையாள எந்தவொரு பிரத்யேக நிறுவனமும் இல்லை ஆதலால், பெரும்பாலும் அது சார்ந்த பொறுப்பு எனது அமைச்சிலேயே காணப்படுகின்றது. 

இடம்பெயர்வுக்கு சிறந்த நிர்வாகத்தைக் கொண்டுவருவதில் தீவிரமான பங்கைக் கொண்டுள்ள கௌரவ அமைச்சருக்கு நான் சமர்ப்பித்தது இதுவாகும். பிரச்சினைகளின் அகலத்தையும் ஆழத்தையும் பெற்றுக் கொள்ளும் நிமித்தம், குடியேற்றப் பிரச்சினையை இலங்கை ஒரு முழுமையான முறையில் தீர்க்க வேண்டும். இதில் பின்வருவன உள்ளடங்குகின்றன:

தொழில் சந்தை தேவைகளுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளை பொருந்தச் செய்தல்

உள்ளூர் சந்தையில் சில அரைத் திறமையான துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினை

இலங்கைக்குள் மற்றும் இலங்கைக்குள்ளிருந்து ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைந்த வழிமுறை மற்றும் ஒழுங்குமுறைகளைத் தேடுதல்

குறிப்பாக மனிதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தலைத் தடுப்பதில்

எதிர்கால வாய்ப்புகளைக் கண்டறிய ஆராய்ச்சி மற்றும் தரவை வலுப்படுத்துதல்

இந்த அம்சம் புலம்பெயர்ந்தோர் அல்லது அகதிகள் மீதான உலகளாவிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை எனினும், தனிப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு விடப்படுவதனால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீதமுள்ள தேவைகளை நிவர்த்தி செய்தல்

2. பிராந்திய மற்றும் உலகளாவிய செயன்முறைகளை மேம்படுத்துதல்

நாங்கள் 'ஒரு நாடு, ஒரு அணி' ஆக செயற்படும்போது, இடம்பெயர்வு ஆளுமை பற்றிய சொற்பொழிவின் பெரும்பகுதியை வடிவமைக்கும் அட்டவணையில் நாம் எதைக் கொண்டு வர முடியுமோ, அத்தகைய வலுவான சமிக்ஞையை சந்தேகத்திற்கு இடமின்றி பிராந்தியத்திலுள்ள எமது கூட்டாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அனுப்ப முடியும். எமது கடின உழைப்பாளிகளான இடம்பெயர்ந்த சமூகத்திற்கு சிறப்பாக சேவை செய்வதற்காக, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட வகையிலான ஜெனீவாவில் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றிய எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இதுபோன்ற பல வாய்ப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

அ) அக்டோபர் 2013 முதல் ஏப்ரல் 2017 வரை இலங்கை தலைமை தாங்கிய போது, 13 ஆசிய தொழில்துறை நாடுகளின் பிராந்திய ஆலோசனை செயன்முறையான, முக்கியமாக ஜி.சி.சி. க்கான கொழும்பு செயன்முறையில் ஒத்துழைப்புகளை உருவாக்க முடிந்தது. அனைவரையும் ஒரே தொழிலாளர் சந்தைக்கான 'போட்டியாளர்கள்' என நீங்கள் அழைக்கலாம். ஆயினும்கூட, நடைமுறைவாதத்தைக் கொண்டுவருவதன் மூலமும், அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலமும், உறுதியான நடவடிக்கைகளை உருவாக்குவதன் மூலமும் ஒத்திசைவைக் கண்டறிய இலங்கைக்கு முடிந்தது. இது கொழும்பு செயன்முறைக்கான கணிசமான மற்றும் நிர்வாக மேம்பாடுகளை உருவாக்கி, பெற்றுக்கொள்ளும் நாடுகள் மற்றும் எஸ்.டி.சி. போன்ற வளர்ச்சிப் பங்காளர்களின் கவனத்தை ஈர்த்தது.

'பிராந்திய மற்றும் சர்வதேச செயன்முறைகளில் இலங்கையின் அர்ப்பணிப்பு' குறித்து எனது காலத்தில் ஜெனீவாவில் பிரதி நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றிய சமந்தா ஜயசூரியவின் விளக்கக்காட்சியின் போது இன்று நீங்கள் மேலதிக விபரங்களை அறிந்து கொள்வீர்கள் என்பதால், ஒரு அணியென்ற வகையில், இலங்கையின் தலைமைத்துவத்தின் கீழ், திறன்கள் அங்கீகாரம் மற்றும் அபிவிருத்தி, புறப்படுவதற்கு முந்தைய நோக்குநிலை, நெறிமுறை ஆட்சேர்ப்பு, பணம் அனுப்புதல் மற்றும் தொழிலாளர் சந்தை ஆராய்ச்சி ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள் பகுதிகளை கொழும்பு செயன்முறையில் பேண முடிந்தது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். டி.ஏ.டப்ளிவ்.ஜி. யின் வெற்றியால், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள், தூதரக ஆதரவு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆரோக்கியம் ஆகிய நான்கு புதிய ஒத்துழைப்பு துறைகளை கொழும்பு செயன்முறை ஏற்படுத்திக் கொண்டது. இந்த டி.ஏ.டப்ளிவ்.ஜி. க்களுக்கு சேவை செய்வதற்கும் அதன் வலைத்தளத்தை பராமரிப்பதற்குமாக  எஸ்.டி.சி. யின் ஆதரவுடன் கொழும்பு செயன்முறையின் தொழில்நுட்ப ஆதரவுப் பிரிவு கொழும்பில் நிறுவப்பட்டது.

ஆ) எமது செயற்றிறன் மிக்க தலைமை மற்றும் கூட்டு முயற்சிகளின் விளைவாக, பல முன்முயற்சிகளுடன் குறிப்பாக திறன் அங்கீகாரம், பி.டி.ஓ மற்றும் ஆட்சேர்ப்பு செயன்முறைகளை மேம்படுத்துவதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் அபுதாபி கலந்துரையாடல் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்காக முன்வந்தது. 2017 ஆம் ஆண்டில் அபுதாபி கலந்துரையாடலின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குஇலங்கை அழைக்கப்பட்டதுடன், இது அடுத்த மாதம் கைவிடப்படவுள்ளது.

இ) கொழும்பு செயன்முறை மற்றும் அபுதாபி கலந்துரையாடல் ஆகியவற்றுக்கிடையிலான கூட்டு முயற்சிகள் மேலும் முன்னெடுக்கப்பட்டன. சென்றன. அபுதாபி கலந்துரையாடலின் தலைமை நாடென்ற வகையில், தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த விடயங்களை நிர்வகிப்பதன் மூலம், ஜி.சி.எம். இல் ஒரு முன்னணி நாடாக ஈடுபட இலங்கைக்கு முடிந்தது.

ஈ) இடம்பெயர்வு மற்றும் அபிவிருத்திக்கான உலகளாவிய மன்றம், ஐ.டி.எம், மற்றும் கூட்டணி 8.7 ஆகியவற்றுடன் கூட்டுசேர்வது உள்ளிட்ட எமது சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புக்களையும் நாம் பயன்படுத்திக்கொண்டோம்.

இதன் விளைவாக, சில ஆண்டுகளில், இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகளில் சர்வதேச அரங்கில் ஒரு தலைமைப் பங்கை இலங்கையால் உருவாக்கிக் கொள்ள முடிந்ததுடன், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் எஸ்.டி.சி. ஆகியவற்றின் கணிசமான ஆதரவைப் பெற்றுக் கொண்டது. 

இடம்பெயர்வு குறித்த உலகளாவிய வலையமைப்பு வடிவம் பெறுவதோடு, ஜி.சி.எம். இன் பின்தொடர்தல் மற்றும் மீளாய்வு செயன்முறை முழு வீச்சில் வருவதால், குடியேற்றம் சார்ந்த உலகக் கருத்துக்கள் எதைக் கொண்டுவருகின்றது என்பதை அடுத்து பாதுகாப்பில் இருப்பதை விட, எமது நியாயமான பங்கை வகிக்கும் முகமாக முன்னணியில் இருப்பதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். அனைத்துப் பங்குதாரர்களின் ஆலோசனையின் மூலம் புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் கையேட்டை ஒன்றிணைக்கும் இந்தப் பயிற்சி சரியான திசையின் ஒரு படியாகும். ஆயினும்கூட, இடம்பெயர்வு சார்ந்த விடயங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காக 'ஒரு நாடு - ஒரு அணியாக' செயற்படுவதை நாங்கள் உண்மையிலேயே நம்பினால், குறைந்த உயர்வில் தொங்கும் பழங்களையும், அதேபோல் உயர்ந்த இலக்குகளையும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

3. தூதரகங்களுக்குள் : 'சொல்லுக்கேற்ப செயலாற்றல்'

உங்களில் பலர் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், அது எல்லா மட்டங்களிலும் ஆழமாகப் பாராட்டப்படுகின்றது என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகின்றேன். நீங்கள் செய்யும் நல்ல வேலைகளில் பெரும்பாலானவை, குறிப்பாக தூதரகங்களில் கவனிக்கப்படாமல் போகும் போது, எமது புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சிரமங்களின் மிகச் சில நிகழ்வுகள்தான், பெரும்பாலும் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஊடக தலைப்புச் செய்திகளாக மாறுகின்றன. எவ்வாறாயினும், எமது விநியோகத் திறனை மேம்படுத்துமாதலால், மேம்பட்ட மற்றும் கட்டமைப்பு, செயற்பாட்டு குறைபாடுகள் உள்ளன என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். 

எனது கருப்பொருள் குறிப்பிடுவது போல, 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நாடு - ஒரு குழு அணுகுமுறை' பற்றி நாங்கள் பேசுகின்றோம். இருப்பினும், கொழும்பைப் போலவே, தூதரகங்களிலும் நாம் பெரும்பாலும் குழிகளில் வேலை செய்கின்றோம். பெரும்பாலும் எது சரியானது, திறமையானது அல்லது நிலையானது என்பதைப் பற்றி நாம் குறைவாகவே அக்கறை கொண்டுள்ளோம், ஆனால் அதைச் செய்வதற்கான அந்தந்த சுயாட்சியை நாங்கள் பாதுகாக்கின்றோம் என்பதுடன், இது பெரும்பாலும் எதையாவது மேற்கொள்வதன் மூலம் கடன் அல்லது நன்மைகளைத் தேடுவதை மாற்றுகின்றது. அதனால்தான் இந்தப் பிரச்சினையில் 'முழு அரசாங்கமும்' சார்ந்த அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

எம்மிடம் 16 தூதரகங்கள் / பணிமனைகளுக்கு மட்டுமே தனித்தனி தொழிலாளர் பிரிவுகள் இருந்தாலும், தூதரகம் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான பணிகளை எமது 67 தூதரகங்கள் / பணிமனைகள் மேற்கொள்கின்றன. எனவே இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நல நடவடிக்கைகளை கையாளும் அனைத்து அதிகாரிகளுக்கும் செயற்பாட்டுக் கையேடு பொருந்தும்.

இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்கள் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதற்காகவே உள்ளன. குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வழக்கமானவர்களா அல்லது ஒழுங்கற்றவர்களா என்பதைப் பொருட்படுத்தாமல் இந்த சேவைகள் வழங்கப்படும். எனவே, புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களின் குறைகளையும் நாம் சமமாக நிவர்த்தி செய்து, அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உதவ வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவாக இருக்கும் பெண் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் தூதரகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பான வீடுகளில் உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதைத் தவிர வேறு எந்தப் பொறுப்பையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்காததால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினூடாக செல்லாத பெண் வீட்டுப் பணியாளர்களைக் கையாள்வது மத்திய கிழக்கிலுள்ள சில தூதரகத் தலைவர்களுக்கு ஒரு சவாலான பணியாகும். புதுப்பிக்கப்பட்ட செயற்பாட்டுக் கையேட்டு வரைவில் கூட இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகள் எதுவும் இல்லை. இதை சரிசெய்ய வேண்டும். தேவைப்பட்டால், திறைசேரியிடமிருந்து இந்த நிதியை கூட்டாகக் கோருவதன் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஆதரவுடன் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண வெளிநாட்டு உறவுகள் அமைச்சு விரும்புகின்றது.

தூதரகத் தலைவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்களின் நலன்களைப் பாதுகாக்க அதிகபட்ச சாத்தியமான முன்முயற்சிகள் / பின்தொடர்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இந்த நாடுகளில் எமது பிரஜைகள் பல்வேறு திறன்களில் ஒரு சொத்தாகவும், 'தூதுவர்கள்' ஆகவும் பணியாற்றுவதை நான் காண்கிறேன். குறிப்பாக வீடுகளில் பணிபுரிபவர்கள், இலங்கை எதைக் குறிக்கின்றது என்பதற்கான விளம்பரம் ஆவர். பல குடும்பங்கள் தமது இளம் குழந்தைகளையும் வயதான பெற்றோர்களையும் இலங்கையர்களின் பராமரிப்பில் விட்டுவிடுகின்றன. எமது மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பது நல்ல விருப்பத்தை ஈர்த்தல் மற்றும் வேலை வாய்ப்புக்களின் அடிப்படையில் மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளையும், வணிக மற்றும் கலாச்சார ஆர்வத்தையும் இலங்கையின்பால் ஈர்க்க முடியும்.

இதற்கு இணையாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களைக் கையாள்வதில், தூதரகத்துக்கும் அரசாங்கத்திற்கும் அவமதிப்பு ஏற்படும் வேளையில் கொழும்பு செயற்படும் அதே அளவிற்கு, பெற்றுக்கொண்ட நாடுகளில் வாழும் இலங்கை சமூகத்தின் உணர்திறன் பற்றியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினையை, குறிப்பாக சிக்கித் தவிப்பவர்களின் பணிகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். 

முடிவுரை

அரச துறை, தனியார் துறை செயற்பாட்டாளர்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு திறன்கள், வளங்கள் மற்றும் பலங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் நம்புகின்றேன். எனவே, கூட்டுத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியன வளங்களை அதிகரித்து, பிரதிபலிப்புக்களின் செயற்றிறனை மேம்படுத்தி, பங்குதாரர்களிடையே நம்பிக்கையை வளர்க்கின்றது.

அரசாங்கத் துறையினுள் கூட, புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் சவால்களைப் பற்றி முதலில் அறிந்த அதிகாரிகளின் ஒருங்கிணைப்பானது, நாடுகளில் குடியேறுபவர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளின் செயற்றிறனை மேம்படுத்தும். இதனால்தான், நாம் சைலோஸில் வேலை செய்வதை நிறுத்திவிட்டு, தூதரகங்கள் / பணிமனைகளுக்குள் 'ஒரு அணி' என ஒன்றாகச் செயற்படுவது அவசியம். இந்த தடையை சமாளிப்பதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சும், அதன் தூதரக வலையமைப்பும் முழுமையாக ஈடுபடும் என நான் அமைச்சருக்கு உறுதிபூணுகின்றேன்.

இந்தக் கையேட்டை இறுதி செய்து செயற்படுத்தியவுடன், அவ்வப்போது கையேட்டை முறையாக செயற்படுத்துவதை கண்காணிக்க ஒரு குழுவை அமைப்போம் என்ற ஆலோசனையுடன் எனது உரையை முடிக்க விரும்புகின்றேன். இது தூதரகங்கள் / பணிமனைகளிலுள்ள தொழிலாளர் பிரிவுகளாலும், தூதரகம் / பணிமனையின் தலைவர்களிடமும் செய்யப்பட வேண்டுமாதலால், கொழும்பு மட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே மேற்கொள்ளப்பட வேண்டும். 

நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த கருத்தரங்கு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகின்றேன். (நிறைவு)

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close