பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பாராட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், மேலும் ஆதரவளிப்பதற்கு உறுதியளிப்பு

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கையைப் பாராட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், மேலும் ஆதரவளிப்பதற்கு உறுதியளிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56வது வருடாந்தக் கூட்டத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவை வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இன்று, மே 02, கொரியக் குடியரசின் சியோலில் வைத்து சந்தித்தார்.

இலங்கைக்கு சவாலான காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய சிறந்த கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்புக்காக இலங்கையின்  நன்றியை அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் சப்ரி, டிஜிட்டல் மயமாக்கல், விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிதித்துறை ஸ்திரத்தன்மை ஆகிய துறைகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவையும் நிதி உதவியையும் மேலும் கோரினார்.  ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், ஒரு பெரிய நெருக்கடியைத் தவிர்ப்பதற்கும், நாட்டின் மீட்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கும் இலங்கை இதுவரை மேற்கொண்டுள்ள ஊக்கமளிக்கும் பணிகளுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இலங்கையுடன் பல்வேறு துறைகளில் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் தொடர்ந்தும் ஈடுபடுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உறுதியளித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மே 02

Please follow and like us:

Close