மியன்மாரிலிருந்து கலாசார தூதுக்குழு இலங்கை வருகை

 மியன்மாரிலிருந்து கலாசார தூதுக்குழு இலங்கை வருகை

 மியன்மார் நாட்டிலிருந்து கலாசார தூதுக்குழுவொன்று ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் சஞ்சரிப்பொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இத்தூதுக்குழுவானது, மியன்மாரின் புனித ஷ்வேதகோன் பகோடா   வின் அறங்காவலர்களை உள்ளடக்கியுள்ளது.

இத்தூதுக்குழுவானது தியவடன நிலமே, பிரதீப் நிலங்க தேள அவர்களின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 21 இலிருந்து 30 வரை இடம்பெறவிருக்கும் கண்டி எசல பெரஹெரவை கண்டுகளிப்பதற்காக வருகை தரவுள்ளது. அவர்கள் இலங்கையில் தங்கும் காலப்பகுதியில் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை, சீகிரியா, தம்புள்ள, ஹபரன, மற்றும் கொழும்பு போன்ற இடங்களுக்கு விஜயமளிக்கவுள்ளது.

தூதுவர் ஜனக பண்டார, மற்றும் யாங்கோனின் இலங்கை தூதரக அதிகாரிகள், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகாலம் நிலைத்திருக்கும் மத மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்பெறச்செய்யும் நோக்கில், இவ்விஜயத்தை வெற்றிகரமாக ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இலங்கை தூதரகம்

யாங்கோன்

2023 ஆகஸ்ட் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close