பிள்ளை தத்தெடுப்பு ஆவணங்கள்

தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

பின்வரும் ஆவணங்கள் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே பிள்ளை தத்தெடுப்பு ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியினால் வழங்கப்படும் தத்தெடுப்புக் கட்டளை (படிவம் 4)
சட்டத்தரணியினால் தயாரிக்கப்படும் பிள்ளையின் இயற்கையான பெற்றோர் / பாதுகாவலரினால் வெளிப்படுத்தப்படும் விருப்பத்தினை நீதிமன்றத்திற்கு வெளிப்படுத்தும் ஆவணம் (படிவம் 2) (இது உயர் நீதிமன்றத்தின் பதிவாளரினால் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்)
தத்தெடுத்த பெற்றோருக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளரினால் வழங்கப்படும் கடிதம்
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளரினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்ட கடிதம்
பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ்
பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் தத்தெடுப்புச் சான்றிதழ்
ஹேக் சமவாயத்தின் 23ஆவது உறுப்புரையின் கீழ் வழங்கப்படும் இணக்கக் கடிதம் (தத்தெடுக்கும் இரண்டு பெற்றோரும் இலங்கையர்களாகவிருப்பின், இது அவசியமில்லை)

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்:  consular@mfa.gov.lk

Close