இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்

இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்

இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, ​​இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாக, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதுடன், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார். இந்தியத் துணை ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

தித்வா புயலினால் பாதிப்படைந்தோரின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான திட்டங்கள் உட்பட, ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவ்விஜயத்தின் போது பரிமாறிக்கொள்ளப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின்போது, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவும் இணைந்துகொள்ளவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01

2026, ஏப்ரல் 17

Please follow and like us:

Close