தித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் அரசாங்கம் 10 உயர் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு அலகுகளை நன்கொடையாக வழங்கியது.
இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கையில் உள்ள பிரேசில் தூதரகத்தின் பதில் பொறுப்புத்தூதுவர் திருமதி மோனிகா மரியா மீரேல்ஸ் நாசரால், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம், 2026, ஜனவரி 09 அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் முறையாக ஒப்படைக்கப்பட்டன.
ஒரு நாளைக்கு 10,000 லீற்றர் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்ட இந்த நீர் சுத்திகரிப்பு அலகுகள், தினமும் சுமார் 7,000 பேருக்கு சுத்தமானதும், பாதுகாப்பானதுமான குடிநீரை கூட்டாக வழங்கும். உடனடி பேரிடர் நிவாரணம் எனும் எண்ணக்கருவிற்கு , பள்ளிகள் மற்றும் மருத்துவமனை போன்ற பொது உட்கட்டமைப்பில் நீண்டகால ஒருங்கிணைப்புக்காகவும், இத்தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்கொடையைப் பெற்ற அமைச்சர் ஹேரத், பிரேசிலின் சரியான நேரத்தில் வழங்கப்பட்ட உதவிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், இது இரு நாடுகளின் வலுவான இருதரப்புக் கூட்டாண்மை மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.
வெளிநட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, ஜனவரி 14


