ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி இன்று (04/11) இலங்கை வந்தடைந்தார். அவர், இன்று பிற்பகல் நடைபெறவுள்ள, இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் இரண்டாவது அமர்வில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணைந்து தலைமை தாங்குவார்.
மத்திய கிழக்கில் இலங்கையின் மிக முக்கியமான வர்த்தக பங்காளிகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம், 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 7வது பெரிய ஏற்றுமதி நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஒரே நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களைக் கொண்ட நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.
வருகை தரும் இராஜாங்க அமைச்சர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்; மேலும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்கவையும் சந்திக்கவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 நவம்பர் 04


