எரித்ரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மாலுமிகளை திருப்பி அனுப்புதல்

எரித்ரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மாலுமிகளை திருப்பி அனுப்புதல்

 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சானது, எகிப்தில் உள்ள இலங்கைத் தூதர்ப்பணியகம் மற்றும் எரித்ரியா அதிகாரிகளுடனான நெருங்கிய ஒருங்கிணைப்புடன், எரித்ரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு (06) இலங்கை மாலுமிகளை நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதை வெற்றிகரமாகச் செயற்படுத்தியுள்ளது.

எரித்ரியாவிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கமைய, தொடர்புடைய நடைமுறைகளை நேரில் கவனித்து, எரித்ரியாவிலிருந்து அவர்கள் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, எரித்ரியாவின் தலைநகரான அஸ்மாராவில் இருந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் இன்று (2025, அக்டோபர் 24) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையர் குழுவை வரவேற்றனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தொடர்ந்து தூதரக உதவிகளை வழங்குவதுடன், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 அக்டோபர் 24

Please follow and like us:

Close