ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த தீர்மானத்தை இலங்கை வரவேற்கிறது

 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீனப் பிரச்சினை குறித்த தீர்மானத்தை இலங்கை வரவேற்கிறது

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வை செயற்படுத்துதல் குறித்த நியூயார்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதை இலங்கை வரவேற்கிறது.

இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமைக்கு, இலங்கை தனது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 2025 செப்டம்பர் 13

 

Please follow and like us:

Close