ஆஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினின் 2025 ஆகஸ்ட் 6-10 வரையான இலங்கை விஜயம்

ஆஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின், 2025 ஆகஸ்ட் 06 முதல் 10 வரையில், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். இவ்விஜயத்தின் போது, அமைதியானதும், நிலையானதும் மற்றும் வளமானதுமான பிராந்தியத்திற்கான இரு இந்தியப் பெருங்கடல் நாடுகளின் பகிரப்பட்ட அபிலாஷைகள் அங்கீகரிக்கப்பட்டதுடன், மேம்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புதிய பகுதிகளும் அடையாளம் காணப்பட்டன.

இலங்கையில் உள்ள முக்கிய பெண் தலைவர்களைச் சந்திக்க ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் கலந்து கொண்டதுடன், ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களுக்குச் சென்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டைக்குச் செல்வதற்கு முன்பு, அவர் சுனாமி அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டதுடன், ஹிக்கடுவயில் உள்ள சுனாமி நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இவ்விஜயமானது, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக ஏற்கனவே உள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஆளுநர் நாயகத்தின் இவ்விஜயமானது, இவ்வாண்டு இடம்பெற்ற ஆஸ்திரேலியாவிலிருந்தான மூன்றாவது உயர்மட்ட விஜயமாகிறது. துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஆளுநர் பிரான்சிஸ் ஆடம்சன் ஆகியோர் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தனர். வெற்றிகரமான உயர்மட்ட விஜயங்கள், தற்போதுள்ள இருதரப்பு கூட்டாண்மையை மேம்பட்ட தளங்களுக்கு உயர்த்துவதில் இரு நாடுகளினதும் ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஆகஸ்ட் 11

.............................

මාධ්‍ය නිවේදනය

 ඔස්ට්‍රේලියාවේ ආණ්ඩුකාර ජනරාල් සමන්තා ජෝයි මොස්ටින් 2025 අගෝස්තු 06-10 දිනවල ශ්‍රී ලංකාවේ සංචාරයක

ඔස්ට්‍රේලියානු ආණ්ඩුකාර ජනරාල් සමන්තා ජෝයි මොස්ටින් 2025 අගෝස්තු 06 සිට 10 වැනි දින දක්වා ශ්‍රී ලංකාව තුළ සිදු කළ නිල සංචාරය අවසන් කළාය.

ආණ්ඩුකාර ජනරාල්වරිය ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහ අගමැති ආචාර්ය හරිනි අමරසූරිය හමුවී අන්‍යෝන්‍ය වශයෙන් වැදගත් කරුණු පිළිබඳව ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වූවාය. මෙම සංචාරයේදී, සාමකාමී, ස්ථාවර සහ සමෘද්ධිමත් කලාපයක් සඳහා ඉන්දියානු සාගර රටවල් දෙක සතු පොදු අභිලාෂයන් දෙපාර්ශ්වයම හඳුනාගත් අතර, ඉහළ මට්ටමේ සහයෝගීතාව සඳහා නව ක්ෂේත්‍ර හඳුනා ගැනීමද මෙම සංචාරයේදී සිදු විය.

ඔස්ට්‍රේලියානු මහ කොමසාරිස් කාර්යාලය විසින් ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛ කාන්තා නායිකාවන් හමුවීම සඳහා සංවිධානය කරන ලද රැස්වීමකට ආණ්ඩුකාර ජනරාල් මොස්ටින් සහභාගී වූ අතර, ඔස්ට්‍රේලියානු රජය විසින් සහය දක්වන ලද සංවර්ධන ව්‍යාපෘති කිහිපයක් නිරීක්ෂණය කිරීම සඳහා බණ්ඩාරගම, මිරිස්ස සහ වැලිගම යන ප්‍රදේශවල සංචාරය කළාය. ඓතිහාසික ගාලු කොටුව නැරඹීමට යෑමට පෙර ඇය හික්කඩුව සුනාමි කෞතුකාගාරයට ගොස් සුනාමි ස්මාරකයට උපහාර දැක්වූවාය.

ද්විපාර්ශ්වික සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීම සහ දෙරටේම අන්‍යෝන්‍ය ප්‍රතිලාභ සඳහා පවතින සහයෝගීතා ක්ෂේත්‍ර පුළුල් කිරීමේ අවස්ථා ගවේෂණය කිරීම මෙම සංචාරයේ අරමුණ විය.

ආණ්ඩුකාර ජනරාල්වරියගේ මෙම සංචාරය, මේ වසරේ ඔස්ට්‍රේලියාවෙන් මෙරටට සිදු කළ තෙවන ඉහළ මට්ටමේ සංචාරයයි. නියෝජ්‍ය අගමැති සහ ආරක්ෂක අමාත්‍ය රිචඩ් මාර්ල්ස් සහ දකුණු ඔස්ට්‍රේලියාවේ ආණ්ඩුකාර ෆ්‍රැන්සිස් ඇඩම්සන් ජුනි මාසයේදී ශ්‍රී ලංකාවට පැමිණියහ. පවතින ද්විපාර්ශ්වික හවුල්කාරිත්වය ඉහළ මට්ටමක් කරා ඔසවා තැබීමට දෙරට සතු උනන්දුව මෙවැනි සාර්ථක ඉහළ මට්ටමේ සංචාර මගින් පිළිබිඹු වෙයි.

විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය

කොළඹ

 2025 අගෝස්තු 11 වැනි දින

.................................

ஊடக வெளியீடு

 ஆஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினின் 2025 ஆகஸ்ட் 6-10 வரையான இலங்கை விஜயம்

 ஆஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின், 2025 ஆகஸ்ட் 06 முதல் 10 வரையில், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். இவ்விஜயத்தின் போது, அமைதியானதும், நிலையானதும் மற்றும் வளமானதுமான பிராந்தியத்திற்கான இரு இந்தியப் பெருங்கடல் நாடுகளின் பகிரப்பட்ட அபிலாஷைகள் அங்கீகரிக்கப்பட்டதுடன், மேம்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புதிய பகுதிகளும் அடையாளம் காணப்பட்டன.

இலங்கையில் உள்ள முக்கிய பெண் தலைவர்களைச் சந்திக்க ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் கலந்து கொண்டதுடன், ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களுக்குச் சென்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டைக்குச் செல்வதற்கு முன்பு, அவர் சுனாமி அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டதுடன், ஹிக்கடுவயில் உள்ள சுனாமி நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இவ்விஜயமானது, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக ஏற்கனவே உள்ள ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஆளுநர் நாயகத்தின் இவ்விஜயமானது, இவ்வாண்டு இடம்பெற்ற ஆஸ்திரேலியாவிலிருந்தான மூன்றாவது உயர்மட்ட விஜயமாகிறது. துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஆளுநர் பிரான்சிஸ் ஆடம்சன் ஆகியோர் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தனர். வெற்றிகரமான உயர்மட்ட விஜயங்கள், தற்போதுள்ள இருதரப்பு கூட்டாண்மையை மேம்பட்ட தளங்களுக்கு உயர்த்துவதில் இரு நாடுகளினதும் ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஆகஸ்ட் 11

Please follow and like us:

Close