காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது. இது வன்முறையை மேலும் அதிகரிப்பதுடன், காசா மக்களை மேலும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கும்.
இலங்கை உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதுடன், நிலையான அமைதியை நிலைநாட்ட இராஜதந்திர உரையாடல் மூலம் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஆகஸ்ட் 09
Please follow and like us:


