இலங்கை 2025 ஆம் ஆண்டிற்கான "உலகின் மிக அழகிய தீவு" என்று முடிசூட்டப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம்!
இந்தியாவின் தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கண்ணீர்த்துளி வடிவ சொர்க்கபூமி உலகெங்கிலும் உள்ள இதயங்களை கவர்கிறது என்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. இலங்கையானது, 833 மைல் கடற்கரையில் நீண்டு கிடக்கும் அதன் தங்க கடற்கரை முதல் மூடுபனி மலைகளை பச்சை பசேலென வர்ணம் தீட்டிய தேயிலைத் தோட்டங்கள் வரை அழகின் அனைத்து அம்சங்களையும் தன்வசப்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சி ததும்பிய கடற்கரை உலாவலுக்கு அப்பால், சாகசங்கள் பல காத்திருக்கின்றன! பழங்கால கோயில்களை ஆராயுங்கள்; அழகான காலனித்துவ நகரங்கள் வழியாக உலாவுங்கள்; மேலும் யால தேசிய வனவிலங்குப்பூங்காவில் மெய்சிலிர்க்க வைக்கும் சவாரிகளில் ஈடுபடுங்கள்; அங்கு கம்பீரமான யானைகளையும், காணுதற்கரிய புலிகளையும் கண்டு மகிழுங்கள்.
மார்கோ போலோ இலங்கையை "உலகின் மிகச்சிறிய தீவுகளில் மிகச்சிறந்த தீவு" என்று அழைத்தார்; அவரின் கூற்றை ஏற்க இதற்கு மேல் சாட்சிகள் வேண்டுமோ!
இவ்வெழில் மிகு தேசத்தின் அபரிமித விந்தையைக் கண்டறிய வாருங்கள்!
............................................
For the video link:


