மத்திய கிழக்கின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து இலங்கை மிகவும் கவலை கொண்டுள்ளது. பதற்ற நிலையைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாம் தொடர்ந்து கோரி வருகிறோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென்பதுடன், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், அதனைப் பேணவும் தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகின்றது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஜூன் 23
Please follow and like us:


