இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான பதற்ற நிலையை  தணிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவது குறித்த இலங்கையின் கோரிக்கை

 இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான பதற்ற நிலையை  தணிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவது குறித்த இலங்கையின் கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளது. இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், உரையாடலில் ஈடுபடுமாறும், பதற்ற நிலையை தணிப்பதற்கான முயற்சிகளைத் தொடருமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இரு நாடுகளிலும் உள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்பில் உள்ளன. அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஜூன் 13

Please follow and like us:

Close