ஊடக வெளியீடு

ஊடக வெளியீடு

இன்று மியான்மர் மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில்  இலங்கை துணை நிற்கிறது. இவ்வேளையில், தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எமது பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாய்லாந்து மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும், யாங்கோன் மற்றும் பெங்கொக்கில் உள்ள உரிய இலங்கை தூதரகங்களுடன் தொடர்பிலிருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 மார்ச் 28

Please follow and like us:

Close