காசாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிக்கை

காசாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிக்கை

காசாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்கிறது.

பணையக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காசாவில் உள்ள அவர்களின் வதிவிடங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்கும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் வழி வகுக்கும் இப்போர் நிறுத்த ஒப்பந்தமானது, நீடித்து நிலைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறான முன்னேற்றங்கள் பாலஸ்தீனத்திலும், அதனை அண்மித்த பிராந்தியத்திலும் நிலையான அமைதியை நிலைநாட்ட சிறப்பாகப் பங்களிப்பு செய்யும் என்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு 

கொழும்பு

 

2025 ஜனவரி 20

Please follow and like us:

Close