செயற்திறன் மீளாய்வு & அமுலாக்கல் பிரிவு (PR&I)

செயற்திறன் மீளாய்வு & அமுலாக்கல் பிரிவு (PR&I)

2023, ஜனவரி இல் நிறுவப்பட்ட செயற்திறன் மீளாய்வு மற்றும் அமுலாக்கல் பிரிவு, அமைச்சின் பின்வரும் செயற்பாடுகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளது:

  • அமைச்சின் வருடாந்த செயற்திட்டம் மற்றும் வருடாந்த செயற்திறன் அறிக்கை தயாரித்தல் மற்றும் அவற்றை உரிய அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சமர்ப்பித்தல்.
  • அமைச்சின் 23 பிராந்திய, குறுக்குவெட்டு, செயற்பாட்டுப் பிரிவுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 60 இலங்கைத் தூதரகங்கள்/பதவிகளுடன் ஒருங்கிணைந்து, முக்கிய பெறுபேற்றுப் பிரிவுகளின் (KRAs) கீழ் அமைச்சின் செயற்திறன் குறித்த காலாண்டு அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை  அடைந்ததன் பின்னர் அவ்வெய்தல்களை மீளாய்வு செய்தல்.
  • அமைச்சின் செயற்திட்டங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களைச் செயற்படுத்துவதை மீளாய்வு செய்வதில் அமைச்சிற்கு உதவுதல்.
  • வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்பட வேண்டிய ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் (MoUs) நிலையைக் கண்காணித்தல் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை அமுல்ப்படுத்துதல்.
  • பாராளுமன்றத்தின் வெளிநாட்டு அலுவல்களுக்கான ஆலோசனைக் குழுக் கூட்டம். COPA மற்றும் பிற கணக்காய்வு மற்றும் நிதி தொடர்பிலான சந்திப்புகளை ஒருங்கிணைத்தல்.
  • அமைச்சின் அவசரகாலப் பொறுப்புப் பிரிவின் செயற்பாடுகளைக் கையாளுதல்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

உதவிப் பணிப்பாளர்

பெயர்: திருமதி. பிரியா நாகராஜா
தொலைபேசி:+94 112 321 897
மின்னஞ்சல்: priya.nagarajah(at)mfa.gov.lk

பணிப்பாளர்

பெயர்: திருமதி. அரோஷா காரியவசம் 
தொலைபேசி:+94 112 321 897
மின்னஞ்சல்: arosha.kariyawasam(at)mfa.gov.lk

பணிப்பாளர்

பெயர்: திருமதி. M.N.A .குரே
தொலைபேசி: +94 112 473 942
மின்னஞ்சல்: pri(at)mfa.gov.lk 

Close