கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான எகிப்து அரேபியக் குடியரசின் விசேடமானதும் முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக திரு. ஆதெல் இப்ராஹிம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், எகிப்து அரேபியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2024 நவம்பர் 07 ஆம் திகதி மு.ப.10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 நவம்பர் 07
Please follow and like us: