துபாயிற்கான இலங்கை துணைத் தூதுவர்ப் பணியகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது மன்னிப்பு நிகழ்ச்சி 2024 இன் போது இலங்கையர்களுக்கு உதவுகிறது

துபாயிற்கான இலங்கை துணைத் தூதுவர்ப் பணியகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது மன்னிப்பு நிகழ்ச்சி 2024 இன் போது இலங்கையர்களுக்கு உதவுகிறது

துபாய் மற்றும் வடக்கு எமிர் இராச்சியங்களுக்கான இலங்கையின் துணைத் தூதுவர்ப் பணியகமானது, 2024, செப்டம்பர் 01 முதல், அக்டோபர் 31 வரை நடைபெறும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொதுச் சலுகை நேர நிகழ்ச்சியின் போது ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு சிறந்ததொரு ஈடுபாட்டுடன் ஆதரவளித்து வருகிறது. இந்நிகழ்வானது, தனிநபர்கள் தங்கள் வீசா நிலைமைகளை முறைப்படுத்திக்கொள்ளவும், அல்லது அபராதங்கள் விதிக்கப்படாமல் இலங்கைக்கு திரும்புவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

2024 செப்டம்பர் 01 முதல் அக்டோபர் 17 வரையிலான இப்பொது மன்னிப்பு திட்டத்துடன் தொடர்புடைய புள்ளிவிபரங்கள் பின்வருமாறு:

  • 8513நபர்கள் வழக்கமான தூதரக நேரங்களிலும் சிறப்புப் பொதுமன்னிப்பு நேரங்களிலும் உதவி/சேவைகளுக்காக துணைத் தூதுவர் நாயகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
  • 1128கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
  •  செல்லுபடியாகும் கடவுச்சீட்டைக் கொண்டிராதவர்களுக்கும், கடவுச்சீட்டைத் தொலைத்தவர்களுக்கும்  960 தற்காலிக பயண ஆவணங்களும் (TTDs), 252 தற்காலிக கடவுச் சீட்டுக்களும் (NMRP) வழங்கப்பட்டுள்ளன.
  • ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஃபிட்ஸ் ஏர் நிறுவனத்தால் தூதுவர் நாயகத்தின் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சாவடிகளில்1175 விமான டிக்கெட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாத/ கடவுச்சீட்டைத் தொலைத்த அனைத்து இலங்கையர்களும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிக்கடவு அட்டையைத் தயார்படுத்தி வழங்குவதற்கான போதிய கால எல்லையான 2024, அக்டோபர் 25 அன்று அல்லது அதற்கு முன், இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பொதுமன்னிப்புக் காலத்தின் போது இலங்கை சமூகத்திற்கு உதவுவதற்கு துணைத் தூதுவர்ப் பணியகம் உறுதிபூண்டுள்ளதுடன், தகுதியுடைய சகல நபர்களும் தமது வீசா நிலையை முறைப்படுத்துவதற்கு அல்லது பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு கிடைக்கக்கூடிய சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது.

இலங்கைத் துணைத் தூதுவர் பணியகம்

துபாய்

2024 நவம்பர் 04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close