இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான உயர்மட்டத்தூதுக்குழு ரஷ்ய கூட்டமைப்புக்கு விஜயம் செய்துள்ளது

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான உயர்மட்டத்தூதுக்குழு ரஷ்ய கூட்டமைப்புக்கு விஜயம் செய்துள்ளது

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான உயர்மட்டக் குழு, ரஷ்யகூட்டமைப்பிற்கு 2024, ஜூன் 26 முதல் 27 வரையிலான காலப்பகுதியில் விஜயமொன்றை மேற்கொண்டு, ரஷ்யகூட்டமைப்பின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அந்த்ரே ருடேன்கோ மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின்பாதுகாப்பு பிரதி அமைச்சர் கேணல் ஜெனரல் ஏ.வி.போமின் ஆகியோருடன் ரஷ்ய ஆயுதப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்த்தியது.

இக்கலந்துரையாடல்கள், வன்செயலில் கொல்லப்பட்ட 17 இலங்கையர்கள், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், தொடர்பு கொள்ள முடியாத இலங்கையர்களின் அவலநிலை, சொந்த முனைப்பில் நாடு திரும்புவதற்கான சாத்தியம், ஒப்பந்தங்களை முன்கூட்டியே நிறுத்துதல் மற்றும் ஊதியத்தை முறைப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.

இச்சந்திப்பின் போது, இலங்கையர்களின் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இரு தரப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயற்குழுவை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்தது. இரு தரப்பினரும் இவ்விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளைத் தொடர ஒப்புக்கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் தலைமையிலான உயர்மட்டத்தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, காமினி வலேபொட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜி.டி.எச்.கமல் குணரத்ன, ரஷ்ய கூட்டமைப்பின் இலங்கைக்கான பொறுப்புத் தூதுவர் பி.எம். அம்சா, தலைமை வழக்கறிஞர் ஹரிப்பிரிய ஜயசுந்தர, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் சிசிர செனவிரத்ன, முன்னாள் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை தூதரகம்

மாஸ்கோ

2024 ஜூன் 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close