புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பல்கெரியக் குடியரசின் தூதுவராக, டாக்டர் நிகோலே யான்கோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பல்கேரியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில், 2024 ஜூன் 05 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூன் 05
Please follow and like us: