புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான லாவோ ஜனநாயக சோசியலிச குடியரசின் தூதுவராக, திரு பௌன்மி வன்மனி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், லாவோஸ் ஜனநாயக சோசியலிச குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில், 2024, ஜூன் 05 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூன் 05
Please follow and like us: