2024, மே 18 அன்று, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செய்தியில் இலங்கையில் "இனப்படுகொலை" இடம்பெற்றதாகக் கூறப்படும பொய்யான குற்றச்சாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நிராகரிக்கிறது.
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை, இலங்கை அரசாங்கம் அனைத்து முந்தைய தகவல்தொடர்புகளிலும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக கனடாவிலோ அல்லது உலகில் வேறு எந்த இடத்திலோ, எந்தவொரு தகுதிவாய்ந்த அதிகார அமைப்பும், இதுவரை புறநிலை நிர்ணயம் செய்யவில்லை.
இவ்வாதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகள், ஐக்கியநாடுகள் சாசனத்தின் கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு கோரி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய பிரிவினைவாத, பயங்கரவாத மோதலின் முடிவுடன் தொடர்புடையது. விடுதலைப் புலிகள் இயக்கம் கனடா உட்பட, உலகளவில் 33 நாடுகளில், பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் இனப்படுகொலை குறித்த தவறான அபிப்பிராயத்திற்கு, பிரதமர் ட்ரூடோ ஒப்புதல் அளித்திருப்பது, வெளிநாடுகளில் வாழும் இலங்கை பாரம்பரியத்தின் மதிப்புமிக்க சமூகமான இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கனேடியர்களிடையே இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகும். இந்த அமைதியை விரும்பும் பிரஜைகள் பலர் இலங்கையுடன் ஆக்கப்பூர்வமான தொடர்புகளிலுள்ளதுடன், அவர்களின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் வரவேற்கிறோம்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், மலாய் இன மக்கள் மற்றும் பர்கர்கள் என அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள் இலங்கையில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். உண்மையில், விடுதலைப் புலிகளின் அன்றாட அடக்குமுறையால் வடக்கிலும் கிழக்கிலும் விகிதாசார அடிப்படையில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்ப் பொதுமக்களாவர். புலிகளின் கொடூரமான பயங்கரவாதச் செயல்களால், அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டன. ஒரு பாரபட்சமான கூற்று, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின், சிக்கலான யதார்த்தத்தை புறக்கணிப்பதுடன், பிரதமர் ட்ரூடோவின் இந்த கருத்துக்கள் இலங்கையர்கள் மத்தியில் பாதகமாக எதிரொலிக்கிறது; மேலும், இலங்கையில் தேசியஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை சீர்குலைக்கிறது.
நமது வரலாறு தொடர்பிலான கனடாவின் கூற்று, பொறுப்பற்ற தவறான தகவலாகும். இது கனடாவிலும் பிறநாடுகளிலும் உள்ள நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்துவதுடன், வெறுப்பை ஊக்குவித்து நிலைநிறுத்துகிறது.
மேலும் இது போன்ற செய்திகள் எளிதாகவும் உடனடியாகவும் சமூக ஊடகங்கள் முலமாக பகிரப்படுகின்றமை, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரவாதம் வலுவடைய ஏதுவாக அமைகிறது.
எனவே கனேடிய அரசாங்கம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பரஸ்பர மரியாதையுடன் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு தொடர்புடைய ஆனால் தனித்துவமான முன்னிலையில், இலங்கை மீதான கனடாவின் சமமற்ற கவனம், இரட்டை நிலைப்பாட்டிற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். இலங்கையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பான தவறான இக்கூற்றை கனடா ஆதரித்தாலும், ஏனைய சந்தர்ப்பங்களில் நாம் சந்தித்த அன்றாட மோசமான மனிதாபிமானமற்ற சூழ்நிலைகள் தொடர்பாக தெளிவற்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. மனித உரிமைகளின் உலகளாவிய வழக்கறிஞர்களாகக் கூறிக்கொள்ளும் கனடா போன்ற நாடுகள், சர்வதேச சமூகத்தில் துருவமுனைப்பு அதிகரிப்பதை விளைவித்துள்ள தங்கள் சுயநல இரட்டைத் தரத்தை வலியுறுத்திக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பொறுத்தவரையில் கனடா பிரதமரின் தொடர்ச்சியான அறிக்கைகள், கனடாவாழ் இலங்கையர்களின் ஒரு சிறு பிரிவினரின் அனுசரணையில் இடம்பெறும், கனடாவின் தேர்தல் வாக்குவங்கி அரசியலின் விளைவுகளாகும்.
இனப்படுகொலை குற்றச்சாட்டை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் - உண்மையில், யுத்தகாலம் முழுவதும், உள்ளூர் அரசுசாரா நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் ஐக்கியநாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான பொருட்கள் தொடர்ச்சியாகவும், முறையாகவும் விநியோகிக்கப்பட்டன. யுத்தத்தில் சிக்கித் தவித்த, விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு உணவும் மருந்துபொருட்களும், தரை மற்றும் கடல் வழியுடாக வழங்கப்பட்டன. காயமடைந்தவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினராயினும், சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. மேலும், யுத்தகாலம் முழுவதும், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான சிவில் நிர்வாகத்தினை அரசாங்கம் உறுதிசெய்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி நிர்வாகம் இலங்கை அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டு அரசஊழியர்களால் நடத்தப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, புலிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்களையும் கண்மூடித்தனமாக குறிவைத்து, அவர்களின் கடத்தல் மற்றும் கடத்தப்பட்ட ஆயுதங்களின் சக்தியால் கட்டுப்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனச்சுத்திகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உட்பட நாட்டின் நடுநிலைவாத தமிழ் தலைமைகளை புலிகள் இலக்கு வைத்து படுகொலை செய்துள்ளனர்.
யுத்தத்தின் முடிவில் இருந்து, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நல்லிணக்கம், ஒற்றுமை, நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை அடைவதற்காக இலங்கை அரசாங்கத்தால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 மே 21