சவூதி அரேபியாவின் ரியாத்தில், 2024, ஏப்ரல் 28 முதல் 29 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வலுத்திறன் குறித்த சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தால், ரியாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சிறப்புக் கூட்டம், பல்வேறு துறைகள் மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து, அன்றைய உடனடித்தீர்வுக்கான மற்றும் சிக்கலான பிரச்சினைகளையொட்டி ஒரு விரிவான உரையாடலை ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, "நகர்ப்புற எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்" மற்றும் "வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு: நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்" ஆகிய இரண்டு அமர்வுகளில், குழு உறுப்பினராக இணைந்துகொள்ளவுள்ளார்.
அதேவேளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நாடான சவுதி அரேபியா உட்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது. ரியாத்திலுள்ள இலங்கை சமூகத்தினரையும் சந்திக்கவுள்ள அமைச்சர்,அங்கு அமைந்துள்ள இலங்கை சர்வதேச பாடசாலைக்கும் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஏப்ரல் 25