சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விஷேட தூதுவரும் அரச சபை உறுப்பினருமான ஷென் யிகிங் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 2023 நவம்பர் 19 ஆந் திகதி இலங்கையை வந்தடைந்தார். அரச சபை உறுப்பினர் யிகின் அனைத்து சீன பெண்கள் கூட்டமைப்பின் தலைவராவார். 2023 நவம்பர் 20 ஆந் திகதி அரச சபை உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சுற்றுலா, விளையாட்டு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த விஜயத்தின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரையும் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்தனர்.
அரச சபை உறுப்பினருடன், அரச சபையின் துணைப் பொதுச்செயலாளர் மெங் யாங், வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரமைப்பின் துணைத் தலைவர் ஜாவோ ஃபெங்டாவோ உட்பட 18 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இணைந்திருந்தனர்.
இந்த விஜயத்தின் போது பிரதிநிதிகள் குழுவினர் ஹம்பாந்தோட்டை துறைமுகம், காலி தேசிய கடல்சார் அருங்காட்சியகம் மற்றும் காலி கோட்டை ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 நவம்பர் 21