தாய்லாந்தின் செனட் செயலகத்தினால், இலங்கைக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், பாங்கோக்கில் உள்ள இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதரகம் ஆகியவை, தாய்லாந்து பாராளுமன்றத்தில், 2023 செப்டம்பர் 26-27 வரை, செனட்டர்கள் மக்கள் சந்திப்பிற்கான செயற்றிட்டத்தின், 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற, "Grassroots Economy Products Exhibition" இல், (அடிப்படை பொருளாதார பொருட்கண்காட்சி) இணைந்தன.
செனட் தலைவர் Pornpetch Wichitcholchai , செனட்டின் துணைத் தலைவர்கள் Singsuk Singpai மற்றும்Suphachai Somcharoen, தாய்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி /சபாநாயகர் Chuan Leekpai, செனட்டர்கள் மற்றும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இலங்கை பொருட்காட்சி கூடாரத்தில் காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை பாராட்டினர். தேசிய கைவினைக் கழகம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, Ranfer Teas (Pvt) Ltd மற்றும் Eswaran Brothers Exports (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களினால் உற்பத்திகள் வழங்கப்பட்டன. சிலோன் தேநீரும் இலங்கைச் சாவடியில் பரிமாறப்பட்டது.
இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தர தூதரகம்
பாங்காக்
03 அக்டோபர் 2023