பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம், பெல்ஜியத்தின் எண்ட்வெர்ப் நகரில், “Discover Sri Lanka: Unveiling the Island’s Beauty in Belgium", என்ற தலைப்பில், 2023, செப்டம்பர் 27 அன்று, பெல்ஜியம் பயண செயற்பாட்டாளர்களுக்கும், சுற்றுலா முகவர் நிறுவனங்களுக்கும் இலங்கையிலுள்ள கண்கவர் விடயங்களை அறிமுகம் செய்வதை நோக்கமாகக்கொண்ட, ஊக்குவிப்பு செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. சுற்றுலா செயற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், இணைய பதிவர்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், பயணப் பத்திரிகை நிரூபர்கள், தொலைக்காட்சி மற்றும் ஊடக வல்லுநர்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட்ட, 80க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர்.
இந்த செயலமர்வின் சிறப்பம்சமாக, அன்ட்வெர்ப் மாகாண ஆளுநர் கேத்தி பெர்க்ஸின் விசேட காணொளிச் செய்தியொன்றின் மூலம், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இலங்கை மேற்கொண்டுள்ள பாராட்டுக்குரிய முயற்சிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். கவர்னர் பெர்க்ஸ் தனது செய்தியில், மெய்யான மற்றும் செழுமையான அனுபவங்களைத் தேடும் பயணிகளுக்கு, ஒரு சிறந்த தேர்வாக அமைவதுடன், பலதரப்பட்ட சலுகைகளைக் கொண்ட இயற்கையான சுற்றுலாத் தளமாக இலங்கை விளங்குவதை பாராட்டினார்.
பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், இலங்கை சுற்றுலாத் துறைக்கான நிலப்பரப்புகள் தொடர்பான, விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதில் முக்கிய இடத்தைப் பிடித்தார். தூதர் ஆசிர்வாதம் தேசத்தில் காணப்படும் அற்புதமான பல்வேறு நிலப்பரப்புகள், அழகிய கடற்கரைகள் மற்றும் செழுமையான கலாச்சார பாரம்பரியம் போன்றவை தொடர்பில் எடுத்துரைத்தார். அவர், இலங்கையின் ஏராளமான வனவிலங்குப் பல்வகைமை, பசுமையான இயற்கை இருப்புக்கள் மற்றும் வளமான ஆயுர்வேத செழுமை மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவின் செழிப்பான அங்கங்கள் பற்றிய தனது நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டார். தனித்துவமான சுவைகளுக்குப் பெயர் பெற்ற இலங்கையின் சமையல் நளபாகம் மற்றும் ஆண்டு முழுவதும் இடம்பெறும் கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை இத்தேசத்தை ஆராய்வதற்கான காரணங்களாக கவனத்தில் கொள்ளப்பட்டன.
எண்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் வேதனம் பெறாத கெளரவ தூதரக அதிகாரி Monique De Decker, இலங்கைக்கான, அபூர்வமான அனுபவங்கள் நிறைந்த சுற்றுலாவின் அற்புதமான வாய்ப்புகளை வலியுறுத்தி, இலங்கையின் அற்புதமான பக்கத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கினார். இலங்கையில் பொருட்கொள்வனவின் அனுபவத்திற்கான மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டதுடன், அவ்வனுபவத்துடனான இலங்கை சந்தைகளின், கடைத்தெருக்களை வாடிக்கையாளர்களின் சொர்க்கம் எனவும் வர்ணித்தார். Monique De Decker, இலங்கை மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலைப் பாராட்டி, அனைத்து பார்வையாளர்களுக்கும் வரவேற்பு அனுபவத்தை உறுதி செய்தார்.
சுற்றுலா ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் (SLAITO) முன்னாள் தலைவருமான மஹேன் காரியவசம், பல்வேறு பயணிகளின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் விரிவான தங்குமிட விருப்பங்களை விவரித்தார். இலங்கைக்கான சர்வதேச தொடர்புகளின் சௌகரியம் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து வலையமைப்பின் செயல்திறன் ஆகியவற்றையும் அவர் வலியுறுத்தினார். மஹேன் காரியவசம், இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் மலிவு விலை மற்றும் பணத்திற்கான விதிவிலக்கான மதிப்பிற்கு உறுதியளித்தார்.
தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட, அனுபவமிக்கவொரு பயண முகவரான, Sjobbe Schellenes, சுற்றுப்பயணங்களை ஊக்குவித்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கையின் சுற்றுலா செயற்பாட்டாளர்களுடனான தனது இனிமையான தொடர்பு ரீதியான அனுபவத்தை விவரித்தார். அவரது சாட்சியம் பெல்ஜிய பயண நிபுணர்களுக்கும் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளுக்கு சான்றாக அமைந்தது.
பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கை தூதரகம், பெல்ஜியத்தில் உள்ள சுற்றுலா மற்றும் பயண முகவர் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, பெல்ஜியத்தின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் சுற்றுலா ஊக்குவிப்பு செயலமர்வுகளை நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் பிரதான நோக்கமானது, தேசத்தின் தனித்துவமான இயற்கை அழகு, கலாச்சார செழுமை மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதன் மூலம், பெல்ஜியப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத்தேர்வுகளில் ஒன்றாக இலங்கையை நிலைநிறுத்துவதாகும்.
பெல்ஜியத்தின் வணிகத் தலைநகரம் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் எண்ட்வெர்ப், அதன் மூலோபாய துறைமுகத்துடனான, விறுவிறுப்பான வணிக மாவட்டத்திலுள்ள, பொருளாதார முக்கியத்துவத்திற்காக புகழ்பெற்ற ஒரு பரபரப்பான நகரமாக விளங்குகின்றது. எண்ட்வெர்ப்பில், "Discover Sri Lanka" சுற்றுலா ஊக்குவிப்பு செயலமர்வு எண்ட்வெர்ப்பின் மூலோபாய இருப்பிடம் மற்றும் சுற்றுலாத்துறைப் பல்வகைமையை மேம்படுத்துவதன் மூலம் நேர்மறையான விளைவுகளின் வாக்குறுதியை தனதாங்கிக்கொண்டது. எண்ட்வெர்ப் பயணிகளுக்கு "கட்டாயம் பார்க்க வேண்டிய" விடுமுறைக்கான இடமாக, இலங்கையை உறுதியாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட பயண செயற்பாட்டாளர்கள், சுற்றுலாத்துறை முகவர் நிறுவனங்கள் மற்றும் இணையப்பதிவாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க பார்வையாளர்களுடன் ஈடுபடுவதற்கான தனித்துவமான வாய்ப்பை இச்செயலமர்வு வழங்கியது.
இலங்கை தூதரகம்
பிரஸ்ஸல்ஸ்
02 அக்டோபர் 2023