பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் பெல்ஜியத்தில் உள்ள வாலோனியா பிராந்தியத்தின் தலைநகரம் நமூருடனான உறவை பலப்படுத்துகின்றமை

பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கை தூதரகம் பெல்ஜியத்தில் உள்ள வாலோனியா பிராந்தியத்தின் தலைநகரம் நமூருடனான உறவை பலப்படுத்துகின்றமை

பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், 2023 செப்டம்பர் 16,  அன்று நடைபெற்ற, வருடாந்த சர்வதேச தின நிகழ்வில் கலந்துகொண்டு, தூதரகத்திற்கும், நமூரின் தலைநகரான வலூனுக்குமிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தினார். இவ்வருடாந்த உயர்மட்ட நிகழ்வானது, நமூர் மாகாண ஆளுனர் டெனிஸ் மாத்தன் மற்றும், நமூரின் நகர தலைவர் மாக்சிம்  ப்ரேவோட் ஆகியோரால், சர்வதேச உறவுகளை பலப்படுத்தும் ஒரு தளமாக செயல்படும் வகையில் , ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் நினைவு நினைவுப் பரிசு, ஆளுநர் டெனிஸ் மாத்தனின் இராஜதந்திர சமூகத்துடனான தீவிர ஈடுபாட்டை எடுத்துக்காட்டியதுடன், தூதர்  ஆசீர்வாதம் மற்றும் ஆளுநருடனான சந்திப்பையும் காட்சிப்படுத்தியது.

இலங்கைத் தூதரகம் நமூருடன் நெருங்கிய உறவுகளை தீவிரமாக வளர்த்து வந்ததுடன், ஆளுநரின் அலுவலகத்தின் உதவியுடன் இதற்கு முன்னதாக வெற்றிகரமானதொரு சுற்றுலா மேம்பாட்டு நிகழ்வொன்றையும் நடாத்தியிருந்தது. சுற்றுலா ஊக்குவிப்புப் பட்டறையில், ஆளுநரின் பங்குபற்றலுடனான இக்கூட்டுறவு முக்கியமானதொரு ஊடக தழுவலுடன், நமூர் மக்களிடையே அதிகமாக விரும்பப்படும் ஒரு விடுமுறை சுற்றுலாத் தளமாக, இலங்கையை நிலை நிறுத்தியது.

ஆகஸ்ட் 2023 இல், இலங்கைத் தூதரகம் இந்நிலையை தக்கவைக்க, நமூரின், உள்ளூர் இதழொன்றில் சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரமொன்றை வெளியிடுவதன் மூலம், மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டது. இம்முயற்சியானது, நமூரில் வசிப்பவர்களின் மனதில் இலங்கையை, ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாப்பயண விருப்பமாக நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

சர்வதேச தின நிகழ்வில் அவர்களின் சுருக்கமான உரையாடலின் போது, ​​ஆளுநர் டெனிஸ் மாத்தன், நமூரில் வழக்கமான வர்த்தக மற்றும் சுற்றுலா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய தூதுவர் ஆசிர்வதத்தை ஊக்குவித்தார். இத்தகைய முயற்சிகள் நீண்ட கால அடிப்படையில், சாதகமான மற்றும் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், நமூர் மக்களுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்துகிறது என வலியுறுத்தினார்.

தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், நமூர் மாகாணத்திலிருந்து தனக்கு கிடைத்த, அன்பான விருந்தோம்பல் மற்றும் ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் நமூருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

அன்ட்வெர்ப்பிலுள்ள, இலங்கைக்கான வேதனம் பெறாத கெளரவ தூதுவர் மொனிக் டி டெக்கரும், பெல்ஜியத்தில் உள்ள தூதரக ஒன்றியத்தின் தலைவர் என்ற முறையில் நமூர் சர்வதேச தினத்தில் கலந்துகொண்டமை இலங்கைக்கும் வலோனியாவுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த ஏதுவாயமைந்தது.

பெல்ஜியம் அதன் மொழியியல் மற்றும் பிராந்திய பன்முகத்தன்மைக்கு புகழ்பெற்றது, அதன் மூன்று முக்கிய பிராந்தியங்களில் ஒன்றான வலோனியா, பிரெஞ்சு மொழி பேசப்படும் பிராந்தியமாகும். பிளெமிஷ் பிராந்தியம் (ஃபிளாண்டர்ஸ்), வடக்கு மற்றும் மேற்கில் முதன்மையாக டச்சு மொழி பேசும் பிராந்தியம், மற்றும் பிரெஞ்சு-டச்சு ஆகிய இருமொழிகள் பேசப்படும், பிரஸ்ஸல்ஸ்-தலைநகரம் ஆகியவை மற்ற இரண்டு புவியியல் பகுதிகளிலடங்கும் வண்ணம் நிர்வகிக்கப்படுகின்றன. வலோனியாவின் தலைநகரான நமூர், ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரம் மட்டுமல்லாமல், முக்கியமான வணிக மற்றும் தொழில்துறை மையமாகவும் விளங்குகிறது.

இலங்கை தூதரகம்

பிரஸ்ஸல்ஸ்

19 செப்டம்பர் 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close