சர்வதேச கடல்சார் அமைப்புக்கான (IMO) இலங்கையின் முதலாவது நிரந்தரப் பிரதிநிதியாக உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன நற்சான்றிதழ்களை வழங்கினார்

 சர்வதேச கடல்சார் அமைப்புக்கான (IMO) இலங்கையின் முதலாவது நிரந்தரப் பிரதிநிதியாக உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன நற்சான்றிதழ்களை வழங்கினார்

08 செப்டெம்பர் 2023 அன்று, உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச் செயலாளர் கிடாக் லிம்மிடம் IMO இற்கான இலங்கையின் முதல் நிரந்தரப் பிரதிநிதிக்கான நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் (IORA) தலைமைப்பதவியை இலங்கை ஏற்கவிருக்கும் அதே நேரத்தில், IMO க்கு இலங்கையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடல்வழிப்பாதைகளில் மிக முக்கிய இடத்தில், அமைவிடம் கொண்டிருக்கும் இலங்கை, இந்து சமுத்திரத்தின் மிகமுக்கியமான மையமாக விளங்குகிறது. இலங்கையின் புவியியல் இருப்பிடம் மற்றும் பிராந்திய சந்தைகளுக்கான, பிரவேசத்திற்கான வாய்ப்பு, அதன் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களுக்கு பெரிதும் நன்மை பயக்கிறது.  நாடானது இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பான ஒரு அமைவிடத்தை பெற்றிருப்பதுடன், கடல்சார் வளங்களின் உச்ச பயன்பாட்டை பெறுவதற்கு எதுவாக அமைகிறது.

1948 இல் நிறுவப்பட்ட, ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்ட IMO, கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் கப்பல்களால் கடல் மற்றும் வளிமண்டல மாசைத் தடுப்பதற்கான பொறுப்பைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனமாகும். IMO தற்போது 175 உறுப்பு நாடுகளையும் மூன்று இணை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இலங்கை 1972 இல் IMO இன் அங்கத்துவத்தைப் பெற்றது.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

லண்டன்

11 செப்டம்பர் 2023

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close