இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் , 75 ஆவது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகம், பாவனா சமூக மன்றம் மற்றும் மேரிலண்ட் பௌத்த விஹாரை ஆகியவை இணைந்து, ஆகஸ்ட் 25 அன்று சான்சரி வளாகத்தில் மேற்கு வர்ஜீனியாவில், பாவனா சமூக மன்ற ஸ்தாபகரான, அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஹேனேபொல குணரதன நாயக்க மகா தேரர் அமெரிக்காவில் ஆற்றிய 55 வருடகால சமய மற்றும் சமூக சேவையை, பாராட்டி கௌரவிப்பதற்கான விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது. வணக்கத்திற்குரிய (கலாநிதி) ஹேனேபொல குணரதன நாயக்க மகா தேரரை கௌரவிக்குமுகமாக, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்கீகரிக்கப்பட்ட தபால்தலையை அடையாளமாக வழங்குவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
நாயக்க தேரரை வரவேற்று ஊர்வலத்தை தொடர்ந்து, பாரம்பரிய பூஜை நடனமொன்றுடன் விழா ஆரம்பமானது. தூதுவர் மஹிந்த சமரசிங்க அவர்களின் வரவேற்புரையின் போது, அதி வணக்கத்திற்குரிய (கலாநிதி) ஹேனேபொல குணரதன நாயக்க மகா தேரர், உலகளாவிய ரீதியில் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில், பௌத்த மிஷனரி சேவைகளின் கலங்கரை விளக்கமாக விளங்கியதுடன், அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கு மட்டுமின்றி மெய்யறிவைத் தேடும், அமெரிக்கர்களுக்கும், தேரவாத புத்த சாசனத்திற்கும் அளப்பரிய மத மற்றும் சமூக சேவையை ஆற்றியுள்ளார், என்பதை குறிப்பிட்டார். மேலும், தூதரக வளாகத்தில் விழாவை நடத்துவதற்கான தனது முடிவும், நாயக்க மகா தேரோ, புத்த, தம்ம மற்றும் சங்கவிற்கு ஆற்றிய முன்மாதிரியான சேவைக்கான மரியாதையின் நிமித்தமாகும் என்பதை குறிப்பிட்டார். தூதுவர் சமரசிங்க நாயக்க மகா தேரோவின் மகத்தான, பல பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தக பதிப்பு சேவையையும், ஆன்மீக வழிமுறை வாழ்க்கையையும் பாராட்டினார். தூதுவர் மேலும், பௌத்த மத போதனைகளை பரப்புவதற்கும், பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கும் ஐக்கிய அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பினையும் பாராட்டினார்.
ஒரு தனித்துவமான பௌத்த பக்தரும், தியான மடத்தை நிறுவுவதற்காக சொத்தொன்றை நன்கொடையளித்த உறுப்பினருமான , மத்யூ ஃபிளிக்ஸ்டீன் அவரது முக்கிய உரையின் போது, பந்தே குணரத்ன, அன்றாட வாழ்க்கையில் மனக்கட்டுப்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும், பக்தர்களை வழிநடத்தி அவர்களை ஒளிர்வடையச்செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பதை விவரித்தார். வணக்கத்துக்குரிய எத்கந்தவக்க சத்தாஜீவ, வணக்கத்துக்குரிய ஹீன்புண்ணே கொண்டஞ்ச, மற்றும் வணக்கத்துக்குரிய சூரக்குலமே பிரேமரத்தன ஆகியோரும் பந்தே குணரத்தனவின் மகத்தான சேவைகளின் பல்வேறு அம்சங்களை பற்றி பேசினர். தூதுவர் சமரசிங்க உத்தியோகபூர்வமாக நினைவு முத்திரையை, மேள மரியாதை மற்றும் ஹேவிசி பூஜைக்கு மத்தியில் நாயக்க மகா தேரரிடம் கையளித்தார். தேரர், தூதுவர் மற்றும் தூதரக ஊழியர்கள் சார்பிலான பாராட்டுச் சின்னத்தை வழங்கினார். மேலும் விழாவின் போது பந்தே குணரதனவிற்கு, விருது வழங்க பல பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேராசிரியர் டொன் குணசேகர, இக்கௌரவிப்பு விழா ஏற்பாட்டு முயற்சிக்கு, தூதர் உட்பட்ட ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மகா சங்க பிரதிநிதிகள், அமெரிக்க அதிகாரிகள் ஐக்கிய அமெரிக்கா அரச திணைக்களத்தின் பிரதி செயலாளர் அபிரீன் அக்தர் உட்பட்ட, அதிகாரிகள், ஏனைய அரச அதிகாரிகள், இராஜதந்திரப் படை உறுப்பினர்கள், பல அமெரிக்க பிரஜைகள் மற்றும் இலங்கையர்கள் மற்றும் பக்தர்கள், சீன, தைவான், பங்களாதேஷ், பர்மிய மற்றும் வியட்நாமியர் போன்ற பல்வேறு தேசிய இனங்கள் அமெரிக்காவின் பல பகுதிகலிலிருந்து, இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பாவனா சொசைட்டியின் சிறப்பு செய்திமடலின் பிரதிகள் மற்றும் இலங்கை தபால் திணைக்களத்தின் தபால்தலை பணியகத்தினால் வெளியிடப்பட்ட முத்திரை அறிக்கைபங்கேற்பாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. பந்தே குணரத்தன எழுதிய, "Mindfulness in Plain English" என்ற புத்தக பிரதிகள் 10 மில்லியன் பிரதிகளுக்கு மேல் ஐக்கிய அமெரிக்காவில் விற்பனையானது. விழாவிற்கு வருகை தந்திருந்த விசேட விருந்தினர்களுக்கும் இனப்பெருமாதி மிக்க புத்தகப் பிரதிகள் வழங்கப்பட்டன.
இவரது மகத்தான சேவையைப் பாராட்டி, பர்மாவிலிருந்து அக்கமகா பண்டிதர் பட்டம் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து கவுரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன. வண. குணரத்தன அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட, இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் தத்துவப் பட்டங்கள், அவரது இறையியல் சேவையை மேலும் விரிவுபடுத்த அவருக்கு உதவியது.
அமெரிக்க பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும், சாப்ளின்சி என்ற பட்டம் பெற்ற முதல் புத்த துறவியும் இவராகும்.
பந்த குணரதனா, 1982 இல், முதல் ஆரண்ய சேனாசனத்தை, (வன மடாலயம்) நிறுவியதுடன், அமெரிக்காவில், மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் " தியான மடத்தை" யும் நிறுவினார். வியட்நாம் போருக்குப் பிறகு 1975 இல் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான வியட்நாம் மக்களை வரவேற்றத்துடன், அமெரிக்காவின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கர்னலாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து மகா விகாரையின் குழு,1985 இல், அவருக்கு வட அமெரிக்காவின் தலைமை துறவி என்ற பட்டம் வழங்கியது.
இலங்கை தூதரகம்
வாஷிங்டன் டிசி.
2023 ஆகஸ்ட் 31