கென்யாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர், ஐசிசி ஆண்கள் கிரிக்கட் உலகக்கோப்பை சுற்றுத்தொடர் 2023 ஐ கண்டுகளிக்க  உகண்டாவின் கிரிக்கட் சங்கத் தலைவர் மைக்கல் நுவகாபாவுடன் இணைந்து கொண்டமை

கென்யாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர், ஐசிசி ஆண்கள் கிரிக்கட் உலகக்கோப்பை சுற்றுத்தொடர் 2023 ஐ கண்டுகளிக்க  உகண்டாவின் கிரிக்கட் சங்கத் தலைவர் மைக்கல் நுவகாபாவுடன் இணைந்து கொண்டமை

விளையாட்டுத்துறையின் தனித்துவத்தை ஒருங்கிணைக்கும்,  எதிர்பார்ப்புக்கள் நிறைந்த முக்கியமான நிகழ்வோன்றான, 2023 உலகக்கோப்பைக்கான, ICC கோப்பை சுற்றுப்பயண தொடக்க விழாவுக்கு, கென்யாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கே.கணநாதன், உகாண்டானாவின் கிரிக்கட் சங்கத் தலைவரான மைக்கல் நுவகாபாவினால் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். இக்கண்கவர் கிரிக்கட் தொடரானது, பல்வகையான நாடுகளின் எல்லையில்லா எதிர்ப்பார்ப்புகளுடனான மனங்கவர் சுற்றுப்பயணமொன்றிற்கான முனைப்பாக அமைந்தது.

சர்வதேச ஆண்கள் கிரிக்கட் கோப்பைத்தொடரானது உயர் மதிப்பிற்குரிய முக்கியமானதொரு தொடராக அமைவதுடன், விளையாட்டு உலகிற்கான நுழைவாயிலாயமைந்து 2023 அக்டோபர் இலிருந்து நவம்பர் 19 வரை இந்தியாவில் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளாவிய ஒரு பில்லியன் கிரிக்கட் ஆர்வலர்களை மென்மெலும் தூண்டும் வண்ணம் அமையவுள்ள இத்தொடர் நடைபெறவுள்ள கால எல்லையில், தொடர்ச்சியான உத்வேகத்துடன்  இணைத்துக்கொள்ளப்போவது உறுதி.

இத்தொடக்க விழாவானது, உலகை உலுக்கிய நோய்த்தொற்றின் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து, வழமைக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் கிரிக்கட் ஆர்வலர்களது, கிரிக்கட் தொடர்பிலான உணர்வினை புதுப்பிக்கும் பிரமாண்டமானதும் உற்சாகமூட்டக்கூடியதுமானதொரு நிகழ்வாக அமைந்தது. கிரிக்கட் சமூகத்தின் பிரதிநிதிகள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் இக்களியாட்டத்தை கண்டுகளிக்க ஒன்றுதிரண்டு வருகைதந்த பிரமுகர்கள் உள்ளடங்கிய பிரமாண்டமான கூட்டமானது, கிரிக்கட் உற்சாகப்பெருங்காற்றாக எதிரொலித்தது.

நிகழ்வில் உரையாற்றிய, உயர் ஸ்தானிகர் கனநாதன், விளையாட்டு என்பது பல்வேறு தேசங்களையும், அவற்றின் பண்புகளையும் எல்லைகளைத்தாண்டி ஐக்கியப்படுத்தும் ஒரு விடயமென்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த சான்றாக அமைகிறது என  குறிப்பிட்டியிருந்தார். இது எதிர்வரும் காலங்களில் உகண்டா, இலங்கை மற்றும் முழு கிரிக்கட் சமூகத்துக்குமிடையிலான தோழமையையும், கூட்டுறவையும் ஏற்படுத்துவதற்கான படிக்கல்லாக அமையுமென்பது திண்ணம். கிரிக்கட் விளையாட்டு பலதரப்பட்ட மக்களின் ஒருமித்த மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் அன்னியோன்யம் போன்றவற்றை உயிர்த்துடிப்புடன் நினைவூட்டும் ஒரு துறையாகும்.

உயர் ஸ்தானிகர் கணநாதன்,  கிரிக்கட் மன்றத்தின் விக்ஷேட அழைப்பின் பேரில், கம்பாலாவில் இடம்பெற்ற, உலகக்கோப்பை சுற்றுப்பயண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். இப்பங்கேற்பானது கிரிக்கட்டின் சர்வதேச முக்கியத்துவத்தையும், கூட்டிணைக்கும் ஆற்றலையும்  காட்டுகிறது. கிரிக்கட்டின் மையமாக குறிப்பிடப்படும் ஆபிரிக்கா, கிரிக்கட்டுக்காக பயன்படுத்தப்படாத திறனாக கருதப்படுகின்றபோதிலும், இவ்வாண்டின் உலகக்கோப்பை சுற்றுப்பயணத்தின் மையமேடையை  பெறுகிறது. தேர்வு செய்யப்பட்ட சில ஆபிரிக்க நாடுகளில் உகண்டா,  நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் இந்நிகழ்வில் மிளிர்கின்றன. அவர்களின் இவ்வருட பங்களிப்பு, கிரிக்கெட்டின் உலகளாவிய நிலப்பரப்பில் ஆப்பிரிக்க கண்டம் வகிக்கும் முக்கிய பங்கை, பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகள் கொண்ட நாடாக  ஒற்றுமையை  நிலைநாட்டுமொரு  கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது.

உகண்டா கிரிக்கட் சபையின் தலைவரான நுவகாபா, உயர்ஸ்தானிகரின் இப்பங்கேற்பானது, கிரிக்கட்டுக்கான உலகளாவிய முக்கியத்துவம், ஒன்றிணைக்கும் சக்தி, புவியியல் அரசியல் எல்லை கடந்து செல்லும் ஆற்றல் போன்றவை, கிரிக்கட்டை ஒரு தீவிர விளையாட்டு என்பதை மீளுறுதி செய்கிறது எனக்கூறினார்.

உலகக்கோப்பை சுற்றுப்பயண தொடக்க கொண்டாட்டத்தின் மேடையமைப்பானது, கிரிக்கட் ஆர்வலர்கள் மற்றும் கிரிக்கட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை  ஆட்டங்கள் தொடங்கும் வரை, மிகச்சிரமத்துடன்  அடக்கி வைக்கப்பட்டு  இருந்ததுடன், மெய்சிலிர்க்கும் மற்றும்  மறக்கமுடியாதவொரு உலககோப்பையாக அமையுமென்பதை உறுதி செய்தது. உற்சாக கரகோஷத்தின் எதிரொலியானது, அறங்கெங்கும்  மீளெழுப்பப்பட்டு, அரங்கை ஆர்ப்பரித்ததுடன், பல தேசங்களையும் இதயங்களையும் இணைக்குமாறு, உலகளாவிய ரீதியில் விரும்பப்படும் சிறந்த விளையாட்டாக கிரிக்கட்டை நிலைநிறுத்தும் பிரமாண்ட காளியாட்டமாக இந்நிகழ்வு அமையப்பெற்றது.

இலங்கை உயர் ஸ்தானிகர் நிலையம்

கென்யா

2023 ஆகஸ்ட் 31

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close