இஸ்ரேலில் இலங்கை தூதரகம் ஏற்டபாடு செய்த உணவுத் திருவிழா

இஸ்ரேலில் இலங்கை தூதரகம் ஏற்டபாடு செய்த உணவுத் திருவிழா

இஸ்ரேல் நாட்டிற்க்கான இலங்கை தூதரகம், இலங்கையின் சமையல் பல்வகைமையைக் காட்சிப்படுத்தும் பாரம்பரிய உணவுவகைகளைக்கொண்ட, உணவுத்திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு டெல் அவீவ் இலுள்ள இலங்கை  தூதுவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

சுற்றுலாப்போக்குவரத்து முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், சமையல் எழுத்தாளர்கள், யூடியூபர்கள், இணையப்பதிவர்கள், சமூக வலைதளங்களில் தாக்கம் செலுத்துவோர், குடியகல்வு அதிகாரசபை மற்றும் விமான நிலைய அதிகாரசபை அதிகாரிகள்   போன்றோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இஸ்ரேலுக்கான இலங்கைத்தூதுவர் நிமல் பண்டார தனது தலைமை உரையின்போது, காட்சிப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் உணவுகலாசாரம், நம்மை புராதன கண்டி இராசதாணிக்குச் அழைத்துச்செல்வதாக மேற்கோளிட்டு கூறியதுடன், இவ்வுணவுவகைகள் அரசர்களுக்கு பரிமாறப்பட்ட விதத்தையும் விளக்கியிருந்தார். மேலும்  விருந்தினர்களின் வேண்டுகோளுக்கிணங்க தூதுவர் வெகுவிரைவில் இலங்கை சமையல் கற்பித்தல் அமைர்வொன்றை ஏற்பாடு செய்ய இணங்கினார்.

தூதுவர் பல இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வருகை தர இருப்பதாகவும் இலங்கைக்குரிய அமைதியான நிலப்பரப்பு, ஐஸ்வர்யமிக்க பாரம்பரியம், மற்றும் தனித்துவமான கலாசாரம், பொழுதுபோக்கு செயற்பாடுகள் போன்றவற்றை மேம்படுத்தக்கூடிய, பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யவிரும்புவதாகவும் குறிப்பிட்டு கூறினார்.

இலங்கை ஜனாதிபதியும் - ஆசிய வர்த்தக சங்க, இஸ்ரேல் - இலங்கை வர்த்தக சங்க தலைவருமான வழக்கறிஞர் அநத் பெர்ன்ஸ்டயின்-ரைச், வர்த்தக சங்க அங்கத்தவர்களும், வியாபார நிறுவனங்களும் இலங்கையுடன் ஏற்றுமதி, இறக்குமதி, சுற்றுலாத்துறை, மக்களுடன் மக்கள் தொடர்புகளினை ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமாயுள்ளதென குறிப்பிட்டிருந்தார். அவர், மேலும் எதிர்வரும் தனது இலங்கைக்கான விஜயத்தின் போது இலங்கை வர்த்தக சபையினரையும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் ஆகியவற்றுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள ஏதிர்பார்ப்பிலுள்ளதாய் கூறினார்.

இலங்கை தூதரகம்

டெல் அவீவ்

25-ஆகஸ்ட்-2023

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close