தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2023 ஜூலை 28ஆந் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயமானது, பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாகும்.
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் உலகளாவிய, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஐரோப்பா மற்றும் வெளிவிவகார அமைச்சர் கெத்தரின் கொலோனா மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட தூதுக்குழுவும் வருகை தரவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜூலை 27