புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான கிரேக்க ஹெலெனிக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. டிமிட்ரியோஸ் ஐயோனோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கிரேக்க ஹெலெனிக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து 2023 ஜூன் 30ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு.
2023 ஜூலை 01
Please follow and like us: