இலங்கைக்கான உகாண்டா குடியரசின் உயர்ஸ்தானிகரின்  நியமனம்

இலங்கைக்கான உகாண்டா குடியரசின் உயர்ஸ்தானிகரின்  நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான உகாண்டா குடியரசின் உயர்ஸ்தானிகராக பேராசிரியை (திருமதி) ஜொய்ஸ் கே. கிகாஃபுண்டா  அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் உகாண்டா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து 2023 ஜூன் 30ஆந் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு.

2023 ஜூலை 01

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close