மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒத்துழைப்பது குறித்து மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர்  கலந்துரையாடல்

 மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒத்துழைப்பது குறித்து மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர்  கலந்துரையாடல்

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பீடாதிபதியின் அழைப்பின் பேரில்,இந்திய தொழில்நுட்ப நிறுவன ம்மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக, மும்பையில் உள்ள இலங்கையின் தூதரகத் தூதுவர் கலாநிதி வல்சன் வேத்தோடி 2023  பிப்ரவரி 21ஆந் திகதி நிறுவன வளாகத்தில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

கலாநிதி வேத்தோடி, பிரதிப் பணிப்பாளர் பேராசிரியர் கே.வி. கிருஷ்ணா ராவ் மற்றும் சர்வதேச உறவுகளின் பீடாதிபதி அமித் அகர்வால் ஆகியோரைச் சந்தித்து, இலங்கையில் இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனத்தை திறப்பது குறித்து கலந்துரையாடினார். இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள பல பல்கலைக்கழகங்களுடன் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியது. இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் மற்றும் கற்கை நெறிகள் குறித்தும் துணைத் தூதுவர் உரையாடினார். மேலும், இந்திய தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினார். மாணவர்களுக்கான கட்டமைப்பை விளக்கிய பீடாதிபதி, அவர்களின் அனைத்து செலவுகளையும் நிறுவனம் ஏற்கும் எனக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்களுக்கு கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் செலவுகளுக்கும் மேலாக புலமைப்பரிசில் தொகை வழங்கப்படுகின்றது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வருடாந்த ஆசிரிய மாநாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டதன் பேரில், இலங்கையில் சிறந்த எம்.ஐ.சி.இ. வசதிகள்  வழங்கப்படுவதால், எதிர்கால மாநாடுகளை இலங்கையில் நடாத்துவது குறித்து துணைத் தூதுவர் முன்மொழிந்தார்.

இலங்கையில் திட்டங்களுக்கு ஆலோசகர்களாக பணியாற்றிய பல துறைகளின் தலைவர்களை துணைத் தூதுவர் மற்றும் தூதர அதிகாரி (வர்த்தக) சந்துன் சமீர  ஆகியோர் சந்தித்தனர். ஒவ்வொரு திணைக்களத்தின் தலைவரும் தமது செயற்பாடுகளின் சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கியதுடன், இலங்கை மாணவர்கள் தமது நிறுவனத்தில் படிப்பதன் மூலம் எவ்வாறு பயனடைவார்கள் என்பதை விளக்கினார்.

உள்நாட்டு மட்டத்தில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பிற்கான மேலதிக கலந்துரையாடல்களைத் தொடங்குவதற்கு பிரதிப் பணிப்பாளரும், பீடாதிபதியும்  தயாராக இருந்தனர். ஜே.டபிள்யூ மேரியட் நிறுவனத்துடன் இணைந்து மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தால் நடாத்தப்படும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை உணவுத் திருவிழாவிற்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு துணைத் தூதுவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் துணைத் தூதரகம்,

மும்பை

2023 ஜனவரி 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close